திருப்பூர் மாவட்டத்தில், சமூக நலத்துறையின் சார்பில் 269 பயனாளிகளுக்கு ரூ.1.71 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் வழங்கினார்கள்

சனிக்கிழமை, 3 ஜூன் 2017      திருப்பூர்
cc 1

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டங்கில், சமூக நலத்துறையின் சார்பில் 254 பயனாளிகளுக்கு ரூ.1.69 கோடி மதிப்பில் திருமண நிதியுதவியும், திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கமும் மற்றும் 15 பயனாளிகளுக்கு ரூ.1.24 இலட்சம் மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்களையும்  வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  உடுமலை கே. ராதாகிருஷ்ணன்  வழங்கினார்கள்.

நிதி உதவி

மறைந்தும் மறையாமாலும் மக்களின் மனதில் வாழந்து வருகின்ற புரட்சித் தலைவி அம்மா  தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக சிறப்பான திட்டங்களை அறிவித்து திறம்பட செயல்படுத்தி உள்ளார்கள்.  குறிப்பாக பெண்களுக்கு அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்காக என்ன தேவை என்பதை அறிந்து திட்டங்களை தாய் உள்ளத்தோடு வாரி வழங்கி உள்ளார்கள்.   அம்மா  2011-ம் ஆண்டு தமிழக முதல்வராக பொறுப்பேற்றபோது ஏழைக் குடும்பங்களின் துயர் துடைப்பதற்காக ஏழைப் பெண்களின் திருமணத்திற்காக 10-ம் மற்றும்  12-ம் வகுப்பு படித்த பெண்களுக்கு  ரூ.25000/- திருமண நிதி உதவித் தொகையும், திருமாங்கல்யத்திற்கு 4 கிராம் தங்கமும், மற்றும் பட்டம் மற்றும் பட்டயம் முடித்தவர்களுக்கு ரூ.50000/- திருமண நிதி உதவித் தொகையும், திருமாங்கல்யத்திற்கு 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வந்தது.  பெண்களின் நலனில் மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்ட  அம்மா  2016-ம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலின் போது தேர்தல் வாக்குறுதியாக திருமாங்கல்யத்திற்கு வழங்கப்பட்ட 4 கிராம் தங்கத்தை 8 கிராம் உயர்த்தி வழங்கியுள்ளார்கள்.  இதன் மூலமாக தமிழகத்தில் பெண் கல்வி ஊக்குவிக்கப்படுவதுடன் திருமணம் செய்து கொள்ளமுடியாத பெண்களில் துயர் துடைப்பதற்காக இத்தகைய திட்டத்தினை வழங்கியுள்ளார்கள்.  மேலும் தமிழகத்தில் 1 கோடியே 70

16 வகையான கல்வி உபகரணங்கள்

இலட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர்களும் வழங்கப்பட்டுள்ளது.  அனைவரும் கல்வி பயில வேண்டும் என்பதற்காக 16 வகையான கல்வி உபகரணங்களையும் வழங்கி கல்வி புரட்சியினையும்  அம்மா  ஏற்படுத்தி தந்துள்ளார்கள்.  தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படும் தமிழக அரசு பிற மாநிலங்களில் இல்லாத வகையில் திட்டங்களை வழங்கிய  அம்மா  விட்டு சென்ற மக்கள் நலத்திட்டங்களையும் பணியினையும் திறம்பட மேற்கொள்வோம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

82 பயனாளிகளுக்கு

மேலும், இன்றைய விழாவில், திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட திருப்பூர்,பல்லடம், பொங்கலூர்,  காங்கேயம், வெள்ளக்கோவில், மூலனூர்,  தாராபுரம், குண்டடம், மடத்துக்குளம், குடிமங்கலம் மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 10-ஆம் வகுப்பு  மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்த 82 பயனாளிகளுக்கு தலா ரூ. 25,000/- மதிப்பில் ரூ.20,50,000/-மும் மற்றும்  பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு முடித்த 172 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000/மும் என ரூ.86,00,000/- மதிப்பிலான திருமண நிதியுதவியும் மற்றும் திருமாங்கல்யத்திற்கு 254 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்கம் வீதம் ரூ.62,77,610/- மதிப்பில் என ரூ.1,69,27,610/- மதிப்பீட்டிலான திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கமும் மற்றும் 15 பயனாளிகளுக்கு ரூ.1,24,540/- மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்களும் என ரூ.1,70,52,150/- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அரசு அளிக்கின்ற நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்டு தங்கள் வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற்று சிறப்புடன் இருக்க வேண்டும். என   வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்   தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் சு.குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), கரைப்புதூர்  ஏ.நடராஜன் (பல்லடம்), உ.தனியரசு (காங்கேயம்), மாவட்ட சமூக நல அலுவலர் ஐ.பூங்கோதை, கண்காணிப்பாளர் இரா.சந்திரமோகன், கூட்டுறவு சங்கத் தலைவர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து