நில அளவை வரைபடங்கள் கணினியில் பதிவேற்ற தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்பு

சனிக்கிழமை, 3 ஜூன் 2017      நீலகிரி

நில அளவை வரைபடங்கள் கணிநியில் பதிவேற்ற தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பாக நீலகிரி மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு-

தனியார் நிறுவனங்கள்

தேசிய நில அளவை ஆவணங்கள் கணினிமயமாக்கும் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நில அளவை வரைபடங்கள் தகுதி வாய்ந்த கணினி பதிவேற்றுநர்களை கொண்டு கணினியில் பதிவு செய்ய தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தப்புள்ளி பெற்று நியமனம் செய்ய இம்மாதம் முதல் பணியினை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே நீலகிரி மாவட்டத்தில் தகுதியுடைய கணினி பதிவேற்றுநர்களைக் கொண்டு இப்பணியினை மேற்கொள்ள விருப்பமுடைய தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளி எதிர்நோக்கப்படுகிறது.

10ம் வகுப்பு தேர்ச்சி

மேலும் இப்பணியினை மேற்கொள்ளும் கணினி பதிவேற்றுநர்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தட்டச்சு தேர்ச்சியும், தமிழ் கீழிநிலை தட்டச்சு தேர்ச்சியும், கணினி இயக்குவதில் திறமையும் பெற்றிருக்க வேண்டும் என கல்வித்தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விருப்பமுள்ள தனியார்நிறுவனங்கள் கூடுதல் விவரங்களை பெற மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர்(நில அளவை) மற்றும் நீலகிரி மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறையின் உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த ஒப்பந்தப்புள்ளியைப் பெற இம்மாதம் 10_ந் தேதி கடைசி நாளாகும். இத்தகவலை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து