முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 170 பயனாளிகளுக்கு 28 இலட்சம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2017      ஈரோடு
Image Unavailable

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்துறையின் சார்பில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஸ்  தலைமையில் நடைபெற்றது.

170 பயனாளிளுக்கு

பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்   ரூ.28 லட்சம் மதிப்பீட்டிலான விலையில்லலா வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகைக்கான ஆணை, விபத்து நிவாரணத் தொகை மற்றும் திருமண உதவித் தொகை  உள்ளிட்ட  அரசு நலத்திட்ட உதவிகளை 170 பயனாளிகளுக்கு வழங்கி பேசியதாவது                                         

மறைந்த முதலமைச்சர்  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியில் நடைபெறும் இந்த அரசு பல்வேறு துறைகளின் சார்பில் ஏழை, எளிய மக்களுக்காக திட்டங்களை வழங்கி செயல்படுத்தி வருகிறது. அதன்படி விவசாயிகளின் துயர் துடைக்கும் வகையில் அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற ரூ.5,482 கோடி சிறு, குறு விவசாய கடனை ரத்து செய்து ஆணையிட்டார்கள். விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் வறட்சி காலங்களில் மானிய விலையில் வைக்கோல், நிவாரண உதவிகள் என பல்வேறு உதவிகளை வழங்கினார்கள். இந்த அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதுடன் வெளிப்படையாக செயல்பட்டு வருகின்றது. பள்ளிக்கல்வித்துறையை பொருத்த வரையில் அனைத்து விதமான பணி நியமனங்கள் வெளிப்படையாக நடத்தப்பட்டு எவ்வித பாகுபாடின்றி செயல்பட்டு வருகின்றது.

41 திட்டங்கள் 

பள்ளிக்கல்வித்துறையில்  நாளை மறு தினம் 6.6.2017 அன்று  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஒப்புதல் பெற்று 41 திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. இத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டதும் தமிழ்நாட்டை இந்திய அரசே வியந்து பார்கும் நிலை ஏற்பட போகின்றது.பள்ளிக்கல்விதுறைக்கு இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கொடுக்கப்படாத முக்கியத்துவம் தமிழ்நாட்டில் கொடுக்கப்பட்டு வருகின்றது. மாணவ/மாணவியர்களின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் இந்த அரசு பள்ளிகளில் நவீன கழிப்பறைகள் உருவாக்கப்பட உள்ளன. மாணவ/மாணவியர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில்  தேர்வு நேரம் 2.5 மணி நேரமாக குறைக்கப்படுகின்றது.

இது போன்ற என்னற்ற திட்டங்களை இந்த அரசு செயல்படுத்த உள்ளது. இந்த அரசு எதையும் எடுத்தோம் கவிழ்தோம் என இல்லாமல் எடுத்தோம் முடித்தோம் என செயல்பட்டு வருகிறன்றது. மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் நான் உங்களின் முதன்மை பணியாளனாக பணியாற்றி வருகிறேன்  என தெரிவித்தார். இவ்விழாவில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் சு.ஈஸ்வரன், கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜன், கோபி வட்டாட்சியர்  (பொ) வெங்டேஸ்வரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து