தி.மலையில் பவுர்ணமியையட்டி -5 லட்சம் பக்தர்கள் கிரிவலம்: நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்

வியாழக்கிழமை, 8 ஜூன் 2017      திருவண்ணாமலை
photo02

 

திருவண்ணாமலையில் நேற்று வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அண்ணாமலையார் உண்ணாமலையம்மனை நீண்ட வரிசையில் காத்திருந்தும் சுவாமி தரிசனம் செய்தனர்.

கிரிவலம்

திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று மாலை 5.35 மணிக்கு தொடங்கியது. இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.34 மணிக்கு நிறைவடைந்தது.

அதையட்டி அண்ணாமலையார் கோவிலில் நேற்று பவுர்ணமி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பவுர்ணமி கிரிவலம் செல்ல நேற்று இரவு உகந்த நேரம் என்பதால் மாலை 5.35 மணிக்கு தொடங்கினாலும் மாலை 4 மணியிலிருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். இரவு 8 மணிக்கு பிறகு கிரிவலம் பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்காக அதிகரித்தது. வழக்கத்தைவிட நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அண்ணாமலையர் கோவிலில் காலைலிருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையார் உண்ணாமலையம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். பொது தரிசனம் சென்ற பக்தர்கள் சுமார் 3 மணிநேரம் காத்திருந்தபிறகே தரிசனம் செய்ய முடிந்தது. அமர்வு தரிசனம் சிறப்பு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டிருந்தது.

பக்தர்களின் கூட்டம் அதிகமாகவே இருந்தது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலப் பாதையிலுள்ள அஷ்ட லிங்கங்களையும் வழிபட்டு கிரிவலம் சென்றனர். பவுர்ணமியை முன்னிட்டு அண்ணாமலையார் கோவில், ரமணாஸ்ரமம், சேஷாத்திரி ஆசிரமம், விசிறி சாமியார் ஆசிரமம் மற்றும் கிரிவலப் பாதையில் பலவேறு இடங்களில் அன்னதானம் மோர், பால் வழங்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் புதுவை கர்நாடகா ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின்பேரில் கோவில் நிர்வாகம், நகராட்சி, ஊராட்சிகள், ஆகியவற்றின் சார்பில் குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் பக்தர்களுக்கு செய்யப்பட்டிருந்தன. அதுமட்டுமின்றி சிறப்பு மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து