முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருதுநகரில் செயல் அலுவலர் தேர்வினை 1590 பேர் தேர்வு எழுதினர் கலெக்டர் சிவஞானம் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 11 ஜூன் 2017      விருதுநகர்
Image Unavailable

  விருதுநகர்.-விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஸ்ரீவித்யா பொறியியல் கல்லூரி தேர்வு மையத்தில் நடைபெற்ற செயல் அலுவலர் கிரேடு-ஐஏ தேர்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள்    நேரில் சென்று ஆய்வு செய்தார்கள்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
விருதுநகர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் மூலமாக செயல் அலுவலர் கிரேடு-ஐஏ தேர்வு, விருதுநகரில் 4 தேர்வு மையங்களில் அதாவது ஸ்ரீவித்யா பொறியியல் கல்லூரியில் 601 விண்ணப்பதாரர்களும், வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில் 900 விண்ணப்பதாரர்களும், விருதுநகர்; ச.வெள்ளைச்சாமிநாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் 900 விண்ணப்பதாரர்களும், விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லூரியில் 900 விண்ணப்பதாரர்களும் என மொத்தம் 3301 விண்ணப்பதாரர்கள்; விருதுநகர் மாவட்டத்தில் 04 தேர்வு மையங்களில்; தேர்;வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இன்று நடைபெற்ற தேர்வில் 1590(48.17சதவீதம்) பேர் தேர்வு எழுதினார்கள். தேர்வு மையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள 11 முதன்மைக் கண்காணிப்பாளர்களும்;, 01 பறக்கும்படை அலுவலரும், 03 மொபைல் பார்டியும் பணி மேற்கொண்டனர். மேலும் தேர்வு மையங்களில் தேர்வினை கண்காணிப்பதற்கு 4 அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலர்களும் வருகைபுரிந்துள்ளனர்.
தேர்வு எழுத வருகின்ற விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களுக்கு சென்றடைவதற்கு அனைத்து வழித்தடங்களிலும் பேருந்து வசதிகள்  சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இயக்கப்பட்டது. தேர்வு மையங்களில் இருக்கைகள், தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளும்,  தீயணைப்பு துறையின் மூலம் மாவட்ட கருவூலத்திற்கு தேவையான தீயணைப்பு வண்டிகள் நிறுத்துவதற்கும் மற்றும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. தேர்வு மையங்களில் தேர்வு எழுதக்கூடிய மாற்றுத்திறனாளிகள் இருப்பின் அவர்களை அந்தந்த தேர்வு மையத்தின் தரை தளத்தில் இருக்கை ஒதுக்கீடு செய்து தேர்வு எழுத உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வு நடைபெறும் நேரங்களில் தடையில்லா மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்தார்கள். 
இந்த ஆய்வின் போது பறக்கும் படை அலுவலர்,மாவட்ட பிற்படுத்தட்டோர் மற்றும் சிறுபான்மையினர்; நல அலுவலர் திரு.பாhத்திபன், விருதுநகர் வட்டாட்சியர் திரு.சையது இப்ராகிம் ஷா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து