முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டம், அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறைகள்: அமைச்சர் கே.பி. அன்பழகன் திறந்து வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 11 ஜூன் 2017      தர்மபுரி
Image Unavailable

 

தருமபுரி மாவட்டம், அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெரியார் பல்கலை கழக முதுநிலை விரிவாக்க மையத்தின் புதிய வகுப்பறைகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் நேற்று (11.06.2017) குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். இவ்விழாவில் கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமை வகித்தார். பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் சி. சுவாமிநாதன் முன்னிலை வகித்தார்.

புதிய வகுப்பறை

இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பேசியதாவது புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசின் சார்பில் சேலம் பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்திற்கு புதிய வகுப்பறைகளை திறந்து வைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தருமபுரியில் இயங்கி வரும் பெரியார் பல்கலைக் கழக முதுநிலை விரிவாக்க மையத்தின் 8 துறைகளின் வாயிலாக முதுநிலை ஆய்வியல் நிறைஞர் (ஆ.Phடை) மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்புகளும் (Ph.னு) சிறப்பாக மாணவர் சமுதாயம் பயன்பெறும் வகையில் நடைபெற்று வருகிறது. தற்போது 20க்கும் மேற்பட்ட நிரந்தர பேராசிரியர்களும், 15 மணித்துளி ஆசிரியர்களும் பணியாற்றி வருகிறார்கள். மேலும் 520-க்கும் மேற்பட்ட முதுகலை மாணாக்கர்களும், 70க்கும் மேற்பட்ட முனைவர் பட்ட (Ph.னு) ஆராய்ச்சி மாணாக்கர்களும் இம்மையத்தில் பயின்று வருகிறார்கள். இம்மையத்தின் அனைத்து துறைகளின் சார்பாகவும், அவ்வப்போது கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள், விழிப்புணர்வு முகாம்கள் போன்றவை மாணாக்கர்கள் மேம்படுத்தும் நோக்கில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் சேலம் பெரியார் பல்கலைக்கத்தினுடைய கல்வி பயன்பாடு தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாணாக்கர்களுக்கு எளிதில் எட்ட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு கடந்த 2012-ம் ஆண்டு நமது தருமபுரியில் பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையம் ஆ.ளுஉ – Phலளiஉளஇ ஆ.ளுஉ – ஊழஅpரவநச ளுஉநைnஉந யனெ ஆ.ளுஉ – ஆயவாநஅயவiஉள ஆகிய மூன்று துறைகளோடு துவக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இம்மையத்தை மேம்படுத்தும் நோக்கிகல் ஆ.யு – நுபெடiளாஇ ஆ.ஊழஅ மற்றும் ஆடீயு ஆகிய துறைகள் 2015-ம் ஆண்டு ஆ.ளுஉ – டீழைவநஉhழெடழபலஇ ஆ.ளுஉ – யுppடநைன புநழடழபல ஆகிய துறைகள் 2016-ம் ஆண்டு துவங்கப்பட்டுள்ளது. பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்திற்கு 18 வகுப்பறைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளது. மேலும் 6 வகுப்பறைகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அருகிலேயே மத்திய நூலகம் அமைந்துள்ளது. உயர்கல்வி பயிலும் மாணவர் செல்வங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இந்த இடம் அமைந்துள்ளது. பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்திற்கு சொந்த கட்டடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் சொந்த கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அடுத்தக்கல்வி ஆண்டில் சொந்த கட்டடத்தில் இயங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைவாக மேற்கொள்ளப்படும்.

மேலும் அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களின் சார்பில் ஆளில்லா விமானம் தயாரித்து இயக்கப்படுகிறது. இந்திய அளவில் 11 மாநிலத்தைச் சேர்ந்த 93 கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் 3 நாள் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. புரட்சித் தலைவி அம்மா இத்திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் ரூ. 20 கோடி ஒதுக்கீடு செய்தார். உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பேசினார்.

இவ்விழாவில் வருவாய் கோட்டாட்சியர் இராமமூர்த்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு. இராமசாமி, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் கே.வி. அரங்கநாதன், கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத் தலைவர் எம். பழனிசாமி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் டி.ஆர். அன்பழகன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்; நிர்மலா கோவிந்தசாமி, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சி. முனுசாமி, பெற்றோர் ஆசிரியர் கழகம், அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைவர் இரவி, கணினி அறிவியல் துறை, பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவக்க மையம் இணைப் பேராசிரியர் முனைவர் ப. செங்கோட்டுவேலன் ஆகியோர் உள்ளனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து