நட்சத்திர விருட்சக விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேகம்

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூன் 2017      காஞ்சிபுரம்
kanchipuram 2017 06 18

காஞ்சிபுரம் வந்தவாசி சாலை கூழமந்தல் அடுத்த உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள கோவில் நட்சத்திர விருட்சக விநாயகர் கோவில். இக்கோவிலில் 27 நட்சத்திரங்களுக்கான ஸ்தலங்கள் ஓரே இடத்தில் அமையப்பெற்றது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

 சிறப்பு பூஜை

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 47 நாட்களாக நட்சத்திர விருட்சக விநாயகர் மற்றும் 27 நட்சத்திரங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து 48-ம் நாளான நேற்று மண்டலாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் 108 சங்கில் புனித நீர் நிரப்பி, அந்தத் தீர்த்தத்தை கங்கையாகப் பாவித்து சுவாமிக்ளுக்கு சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக யாகசாலை பூஜைகள் நடந்தது

பின்னர் 27 நட்சத்திர சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைப்பெற்றது. அதன்பின் சுவாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப்பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து