கரூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் : கலெக்டர் கு.கோவிந்தராஜ் வழங்கினார்

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      கரூர்
karur 2017 06 19

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், தலைமையில் நேற்று(19.06.2017) நடைபெற்றது.

கல்விக்கடன்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல்துறை நடவடிக்கை, புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 342 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக்கொண்டு பரிசீலித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார்.


மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் பெருமக்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள், மாவட்ட கலெக்டர் மனுநீதி நாள் முகாம் மனுக்கள், மாவட்ட உயர் அலுவலர்களின் மனுநீதி நாள் முகாம் மனுக்கள், மக்களைத்தேடி வருவாய்த்துறை அம்மா திட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆகியவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தாராஜ், ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் புதுவாழ்வு திட்டம் சார்பாகஇலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்ட 4 மகளிர்களுக்கு மாவட்ட தொழில் மையம் மற்றும் மானியத்துடன் வங்கி கடன் ரூ.12இலட்சம் நிதி உதவியுடன் 4 ஆட்டோக்களையும், தாட்கோ அலுவலகமூலம், மாவட்ட ஆட்சித்தலைவரின் விருப்புரிமை நிதியின் கீழ் பயனாளி ஒருவருக்கு சிறு தொழில் செய்வதர்;கான பெட்டி ரூ.20 ஆயிரம் மதிப்பிலும்,16 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான உத்தரவினையும் வழங்கினார். மேலும் சிறுசேமிப்பு துறையின் சார்பாக சிறந்த சிறுசேமிப்பு முகவர்கள் பரிசு மற்றும் கேடயங்களையும் பெற்றனர்.,விளையாட்டு துறையின் சார்பாக ஆசிய யோகபோட்டியில் சேம்பியன் கோப்பை வென்ற இருதயராஜ் பாராட்டு பெற்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, மக்கள் குறைதீர்க்கும் தனித்துணை கலெக்டர் ஜான்சிராணி, புதுவாழ்வு திட்ட மேலாளர் ஜெய்கணேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து