சேலம் மாநகராட்சி பகுதியில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உப்பு சர்க்கரை கரைசல் வழங்கும் பணி: ஆணையாளர் ரெ.சதீஷ் துவக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      சேலம்
1 a

தென் மேற்கு பருவமழையினால் ஏற்படும் தட்ப வெப்ப நிலை மாறுதலின் போது குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுபோக்கு போன்ற நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கு ஏதுவாக , தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்களினால் ஏற்படும் பாதிப்பினை தவிர்க்கும் பொருட்டு, உப்பு சர்க்கரை கரைசல் ஜிங்க் மாத்திரைகள் வழங்கும் சிறப்பு முகாமினை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் வி. பன்னீர் செல்வம் அவர்கள் முன்னிலையில் தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ் அவர்கள் மாநகராட்சி சகாதேவபுரம் துவக்கப்பள்ளியில் தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ் துவக்கி வைத்தார்.

சிறப்பு முகாம்

பின்னர் ஆணையாளர் தெரிவித்ததாவது : -

இச்சிறப்பு முகாம் 19.6.2017 முதல் 01.7.2017 வரை நடைபெறும். சேலம் மாநகராட்சி சுகாதார துறையின் சார்பில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தென் மேற்கு பருவ மழையின் போது ஏற்படும் தட்ப வெப்ப நிலை மாற்றங்களால் ஏற்படும் வயிற்று போக்கு உள்ளிட்ட நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக உப்பு சர்க்கரை கரைசல் (டீசயட சுநாலனசயவiடிn ளுயடவள ஐ.ஞ.) மற்றும் ஜிங்க் (ஷ்inஉ) மாத்திரைகள் சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 16 ஆரம்ப சுகாதார நிலையங்கள் , 320 அங்கன்வாடி மையங்கள் , ஆகிவற்றின் மூலம் 5 வயதுக்குட்பட்ட 70,000 குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.

19.6.2017 முதல் 24.6.2017 வரையிலான முதல் வாரத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் நகர சுகாதார செவிலியர்கள் மூலம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ள அனைத்து வீடுகளுக்கும் உப்பு சர்க்கரை கரைசல் நேரடியாக வழங்கப்படும். பின்னர் 25.6.2017 முதல் 01.7.2017 வரையிலான 2 ஆம் வாரத்தில் வயிற்றுபோக்கினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, உப்பு சர்க்கரை கரைசல் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்படும். அனைத்து தாய்மார்களுக்கும் ஊட்டச்சத்துணவு மற்றும் கை கழுவும் முறை தொடர்பான விளக்கங்கள் சுகாதார பணியாளர்களால் தெரிவிக்கப்படும். மேலும் குழந்தைகளுக்கு வயிற்றுபோக்கினால் ஏற்படும் நீர் இழப்பை கட்டுப்படுத்தி , ஜிங்க் (ஷ்inஉ) மாத்திரைகள் மூலம் எதிர்ப்பு சக்தி உருவாக ஏதுவாகவும், தாய்மார்களின் இடையே (டீசயட சுநாலனசயவiடிn ளுயடவள ஐ.ஞ.) உப்பு சர்க்கரை கரைசல் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் பயன்பாட்டை அதிகிரிக்கவும் குழந்தைகளின் வயிற்றுப்போக்கு மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்பை தடுத்திடும் வகையில், சேலம் மாநகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இம்முகாமினை பொது மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் அ.அசோகன், மாநகர நல அலுவலர் மரு.ஆர்.செல்வகுமார், மற்றும் மாநகராட்சி சுகாதாரத் துறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து