கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      கிருஷ்ணகிரி
2

கிருஷ்ணகிரி மாவட்ட பிற்பட்டோர் நலத் துறை சார்பில் நரிக்குறவர் நல வாரிய உறுப்பினர்களுக்கு தனி நபர் தொழில் தொடங்க 74 நபர்களுக்கு மானிய உதவித்தொகையாக ரூ. 5 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளை கலெக்டர் நேற்று ( 19.06.2017) வழங்கினார்.

குடிநீர் வசதி

 

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் (19.06.2017 ) நடைபெற்றது. இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் குடிநீர் வசதி, மின்வசதி, பட்டா வேண்டியும், கல்வி உதவித் தொகை, ஓய்வூதியத் தொகை, இலவச தையல் எந்திரம், சலவைப் பெட்டி, வேண்டியும் மற்றும் சாலை வசதி வேண்டியும், மின் இணைப்பு, வீட்டுமனைப்பட்டா, பல்வேறு கோரிக்கைகள் உள்ளிட்ட மொத்தம் 224 மனுக்களும் , மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 11 மனுக்களும் ஆக மொத்தம் 235 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 1796 -அங்கான்வாடி மையத்தில் பயின்று 5 வயது நிறைவடைந்த 6,784 குழந்தைகளுக்கு முன் பருவ கல்வி நிறைவு சான்றிதழ் வழங்கும் பணிகளை கலெக்டர் அவர்கள் இன்று துவக்கி வைத்து முதற்கட்டமாக 23 - குழந்தைகளுக்கு முன் பருவ கல்வி நிறைவு சான்றிதழ்களை வழங்கினார்.

தொடர்ந்து மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் நரிக்குறவர் நல வாரிய உறுப்பினர்களுக்கு தனி நபர் தொழில் தொடங்க 74 நரிகுறவர் இன மக்களுக்கு தலா 7500 வீதம் மொத்தம் 5 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளை கலெக்டர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி, நலப்பணிகள் இணை இயக்குநர் மரு. அசோக்குமார், துணை இயக்குநர் ( சுகாதாரப்பணிகள்) மரு. பிரியாராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் புஷ்பலதா, தனி துணை கலெக்டர் வசந்தா, உதவி ஆணையர் ( ஆயம்) கீதாராணி, மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன், மாவட்ட ஆதிதிராவிடர் அலுவலர் வீ.சிவசங்கரன், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு, மாவட்ட பிற்பட்டோர் நலத் துறை அலுவலர் அ.அய்யப்பன் , மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து