முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு நாளைக்கு 8 தடவைக்கு மேல் சிறுநீர் கழிக்கும் பழக்கம் கொண்டவர உங்களுக்கு சிறுநீர்ப்பை கோளாறு இருக்க வாய்ப்பு

வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017      மருத்துவ பூமி
Image Unavailable

Source: provided

மதுரை மருத்துவமனைகளில் சிறுநீர்ப்பை கோளாறு விழிப்புணர்வு வாரம் வரும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. வயது முதிர்வு காரணமாக வரக் கூடிய பல்வேறு பிரச்னைகளில் சிறுநீர்ப்பை கோளாறும் ஒன்று. பெரும்பாலும் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் ஆறில் ஒருவர் சிறுநீர்ப்பை கோளாறு பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இந்தப் பாதிப்பால், சிறுநீர்ப்பை நிரம்பி, உடனே சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும். சில சமயம், வயதானோருக்கு தெரியாமலேயே சிறுநீர் வெளியேறிவிடும். சிறுநீர்ப்பையில் சிறுநீர் நிரம்பிவிட்டதாக, மூளைக்கு தவறான தகவல்களை சிறுநீர்ப்பையில் உள்ள நரம்பு செல்கள் அனுப்புவதால்தான் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவது மூலமாக முழுமையாக இந்தக் கோளாறை முழுமையாகக் குணமடையச் செய்ய முடியும். இந்தப் பிரச்னை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மதுரை மருத்துவமனைகளில் ஜூன் 19-ம் தேதி முதல் ஒரு வாரம் சிறுநீர்ப்பை கோளாறு விழிப்புணர்வு அனுசரிக்கப்படுகிறது.

இதுகுறித்து மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மற்றும் மருத்துவர் ஆ.எம். சதீஷ்குமார் கூறுகையில், சிறுநீர்ப்பை கோளாறு காரணமாக உடனே சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு வயதானவர்களிடம் ஏற்படும். சில சமயம் அவர்கள் கழிவறைக்கு செல்வதற்குள், சிறுநீர் வெளியேறிவிடும். ஒரு நாளைக்கு 8 தடவைக்கு மேல் சிறுநீர் கழிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்தால், உங்களுக்கு சிறுநீர்ப்பை கோளாறு இருக்க வாய்ப்பு இருக்கிறது. வயது முதிர்வு காரணமாக வரக் கூட இந்தப் பிரச்சனையை சமுதாயம் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கிறது. குழந்தைகளை போல வயதானோரும் அவர்களுக்கு தெரியாமலேயே சிறுநீர் கழிக்கின்றனர் என்பதை சமுதாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்தப் பிரச்னை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுநீர்ப்பை கோளாறு விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது, என்றார்.

இதுகுறித்து மேலும் மதுரையில் உள்ள திண்டுக்கல் கிட்னி சென்டர் மருத்துவர் ஆர்.நாகராஜன் கூறுகையில், சிறுநீர்ப்பை கோளாறால் பாதிக்கப்பட்டோர், இதுகுறித்து மருத்துவர்களிடம் தெரிவிக்க  வெட்கப்படுகின்றனர். உடலரீதியான பல பிரச்னைகள் போல, இதுவும் ஒரு பிரச்னைதான். முதலில், சிறுநீர்ப்பை கோளாறால் பாதிக்கப்பட்டோர், அதுகுறித்து மருத்துவர்களிடம் மனம்விட்டு பேச வேண்டும். உணவு முறையில் மாற்றம், தகுந்த மருந்துகளை எடுத்துக் கொள்வது ஆகியவற்றின் மூலமாக சிறுநீர்ப்பை கோளாறு பிரச்னைக்கு தீர்வு காண முடியும், என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து