செஞ்சி சட்ட மன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூன் 2017      விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்ட மன்ற தொகுதியில் தகுதி வாய்ந்த  வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் அதிகளவில் சேர்த்தல் மற்றும் பிழைகளைநீக்கும் பொருட்டு சிறப்பு பணி நடத்த   இந்திய தேர்தல்  ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 சிறப்பு முகாம்கள்

இதனை தொடர்ந்து எந்த ஒரு வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் கருப்பொருளுக்கிணங்க அதிகஅளவில் இளைய வாக்காளர்களை குறிப்பாக 18-19 வயதுக் குழுமத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 31-ம்தேதி வரை இச்சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. செஞ்சி சட்ட மன்ற தொகுதியில் 9-7-2017 மற்றும் 23-7-2017 ஆகிய தினங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் நடைபெறஉள்ளன.அந்த நாட்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அமர்ந்து நிரப்பபட்ட படிவங்களை பெறுவார்கள். இச் சிறப்பு பணியின்போது இறந்த வாக்காளர்களின் பெயர்களை வாக்களார்க பட்டியலில் இருந்து நீக்கும் பணியும் நடைபெற உள்ளது. எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு செஞ்சி வட்டாட்சியர் எஸ்.கலா தெரிவித்துள்ளார்.மேலும் படிவங்களை WWW.elections.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமும்வி ண்ணப்பிக்கலாம்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து