முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீடி தொழிலாளர்கள் தொடர்ந்து 6வது நாளாக போராட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூன் 2017      திருநெல்வேலி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்டத்தில் சி.ஐ.டி.யு பீடி தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 பல்வேறு கோரிக்கைகள்

தரமான இலை 1000 பீடி சுற்ற 700கிராம் இலை வழங்க வேண்டும் , பஞ்சபடி உயர்வு மற்றும் பாக்கிகளை வழங்க வேண்டும், பீடி சுற்றும் தொழிலாளர்க்ளுக்கு அவர்களின் சம்பள பணத்தை கைகளிலே வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கணேஷ் பீடி கம்பெனி பீடி தொழிலாளர்கள் மற்றும் முருகா ஹோம் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய கம்பெனிகளில் பீடி சுற்றும் சி.ஐ.டி.யு பீடி தொழிலாளர்கள் தொடர்ந்து 6  ஆவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற்னர்  அம்பை கணேஷ் பீடி கம்பெனி முன்பு பீடி தொழிலாளர்கள் ஒப்பாரி போராட்டம் நடத்தினர்.

தொடர் போராட்டம்

இதில் பீடி சஙக மாவட்ட செயலாளர் வேல்முருகன், சி.பி.எம். ஒன்றிய செயலாளர் ரவீந்திரன்,பீடி சங்க நிர்வாகிகள் சுடலைமணி, ஒன்றிய தலைவர் ரபேக்காள், பொருளாளர் இசக்கிராஜன், மார்க்சிஸ்ட் ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெகதீசன், சங்க ஒன்றிய நிர்வாகிகள் பூபதி, லட்சுமி, அருள்சக்தி, முத்துமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதே போல் சுரண்டை கணேஷ் பீடி கம்பெனி முன்பு ஒப்பாரி வைக்கும் போராட்டத்தை பீடி தொழிலாளர்கள் நடத்தினார் ,இதற்கிடையே வெள்ளியன்று மாலை அம்பை தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் மீண்டும் ஸ்டிரைக் நடத்தும் முடிவுக்கு தொழிலாளர்கள் வந்து 6 ஆவது நாளாக வேலை நிறுத்தத்தை தொடர்ந்து நடத்தி வருகின்ற்னர். இந்நிலையில் பாளை தொழிலாளர் துறை துணை ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது ,மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி 25ஆயிரம் பீடி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்ற்னர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து