குற்றாலத்தில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017      திருநெல்வேலி
courtralam five falls 2017 07 02

குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 களை கட்டும் சீசன்

குற்றாலத்தில் சீசன் துவங்கி களை கட்டி வருகிறது. கடந்த வாரம் சீசன் மிக அருமையாக இருந்தது. இந்த வாரம் நேற்று பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்தாலும் மாலையில் ஜிலு ஜிலு என சாரல் மழை பெய்து வெப்பத்தை தணித்தது. இரவு சாரல் மழை விட்டு விட்டு தொடர்ந்ததால் குளிர்ச்சி நிலவியது. காலையில் சாரலின் தூரல் இருந்தது. பின்னர் வெயில் அடித்தாலும் வெயிலின் தாக்கம் தென்படவில்லை. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து தாராளமாக இருக்கிறது.

அலைமோதும் பயணிகள் கூட்டம்

மெயின் அருவியில் ஆர்ச்சை தொட்டுக் கொண்டும், ஐந்தருவியில் 5 கிளைகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. பழையகுற்றால அருவியில் மட்டும் குறைவாக தண்ணீர் விழுகிறது. சிற்றருவி, புலியருவியில் தண்ணீர் வரத்து தாராளமாக இருக்கிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. அருவி பகுதியில் நெருக்கடி அதிகமாக இருக்கிறது. பழையகுற்றாலம், ஐந்தருவி ரோடுகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக குற்றாலம்-ஐந்தருவி சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. அருவிப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான ஆலோசனைகளை காவல்துறையினர் மைக் மூலமாக அறிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து