முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதுநிலை ஆசிரியர் தேர்வு நடைபெற்ற மையம்: கலெக்டர் (பொ) அ. சங்கர் பார்வையிட்டார்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017      தர்மபுரி

தருமபுரி மாவட்டம், அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்  முதுநிலை ஆசிரியர் தேர்வு நடைபெறும் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் (பொ)அ. சங்கர்    பார்வையிட்டார்.

 தேர்வ

தருமபுரி மாவட்டத்தில்  நடைபெறும்   முதுநிலை ஆசிரியர் தேர்வு - ல் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 10999 பேர் அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அவ்வையர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, விஜய் வித்யாலயா ஆண்கள் மேல்நிலைபள்ளி, விஜய் வித்யாலயா பெண்கள் மேல்நிலைபள்ளி, அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அதியமான்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,  நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி, பாப்பாரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி, செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பச்சமுத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாலக்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காரிமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, டான் மெட்ரிக், டான் போஸ்கோ, ஆட்டுக்காரம்பட்டி பரம்வீர் உள்ளிட்ட 28 மையங்களில் இத்தேர்வினை 10999 பேர்  தேர்வினை எழுதுகிறார்கள்.

10454 பேர் தேர்வெழுதினர்

அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதுநிலை ஆசிரியர் தேர்வு தேர்வாளர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவசர தேவைக்கு மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. தேர்வில் எவ்வித முறைகேடும் இல்லாமல் நடைபெற கல்வித்துறை சார்பாக சிறப்பு வழித்தட அலுவலர்கள் நியமித்து கண்காணித்து வருகின்றன.  இது தவிர மாவட்ட அலுவலர்கள் தலைமையில் 11 பறக்கும் படை கண்காணிப்பு பணியில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். மாற்றுத்திறனாளிகள் 17 பேர் தேர்வு எழுதியுள்ளனர். மேலும்   முதுநிலை ஆசிரியர் தேர்வு -ல் கலந்து கொண்டவர்கள் 10454 பேர், தேர்வில் கலந்து கொள்ளாதவர்கள் 545 பேர்.  இந்நிகழ்வின் போது  கோட்டாட்சியர்  இராமமூர்த்தி, வட்டாட்சியர்    ஜெயலட்சுமி  ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து