காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சர்வதேச கருத்தரங்கு

alagappa news photo

காரைக்குடி: -காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழக தொழிலக வேதியியல் துறையின் சார்பில் “வேதியியல் தொழில் நுட்பத்தின் முதன்மை பகுதிகள் - 2017” என்ற தலைப்பிலான மூன்று நாட்கள் சர்வதேச கருத்தரங்கின் துவக்கவிழா பல்கலைக்கழக பட்டமளிப்புவிழா கருத்தரங்க அறையில் நடைபெற்றது.
 அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையாஅவர்கள் இக்கருத்தரங்கிற்குத் தலைமையேற்று உரையாற்றுகையில், இந்த கருத்தரங்கமானது தேசியத் தரநிர்ணயக் குழுவின் யூ அந்தஸ்து பெற்றபின் நடத்தப்படும் முதல் பன்னாட்டுகருத்தரங்கமாகும்.  இதில் போலந்து, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, பிரான்சு, உள்ளிட்ட நாடுகளிலிருந்து விஞ்ஞானிகள் அறிவியல் பேருரை ஆற்ற உள்ளனர். ஆராய்ச்சி மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்து அறிவியல் சார்ந்த அறிவினை மேம்படுத்த இக்கருத்தரங்கம் ஒரு அரியவாய்ப்பாக அமையும். 
 21-ம் நூற்றாண்டின் தகவல் தொழில்நுட்பம், சுற்றுச் சூழல் மற்றும் நிலையான வளர்ச்சி சகாப்தத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அறிவியல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியின் மூலம் வாழ்க்கைத் தரம் மேம்பட்டாலும், நீர் மற்றும் காற்று ஆகியவைகளின் தரம் சற்றே குறைந்து வருகிறது.  இதனை சமன் செய்யும் பொருட்டு புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்பங்களும் கையாளப்பட வேண்டும். இதன் மூலம் மனித வாழ்க்கைத் தரம் மற்றும் நலம் ஆகியவை மேம்படும்.
 போலந்து நாட்டின் பேராசிரியர் ஜெர்சிரேடாகி, தமது தொடக்க உரையில்,அறிவியல் தொழில் நுட்பத்தில் இந்தியர்களின் பங்கை வெகுவாகப் பாராட்டினார். மின் வேதியியல், பெரு மூலக்கூறு வேதியியல் மற்றும் பசுமை வேதியியல் ஆகிய தொழில் நுட்பங்களின் மூலம் புதிய உத்திகளைகையாள முடியும் என்றார். புதிய தொழில்நுட்பத்தில் நேர்மின் துகள்களை (யnழைளெ) அங்கீகரிப்பது சவாலான அறிவியல் ஆய்வாகும் என்று எடுத்துரைத்தார். தொழில்நுட்பம் சார்ந்த அறிவியல் ஆய்வுகள் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும மிகவும் முக்கியம் என்றுகுறிப்பிட்டார். அன்றாட வாழ்க்கையில் வேதியியல் பொருட்களின் தேவை அதிகரித்து வருவதுடன், அத்தியாவசியமாகிவிட்டது என்று குறிப்பிட்டார்.  எனவே, மனித தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
 தொழிலக வேதியியல் துறைத் தலைவர் பேரா.பரிதிமால் கலைஞன், இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கம் பற்றி விளக்கினார். பல்வேறு நாடுகளிலிருந்து வந்துள்ள விஞ்ஞானிகள் இந்த மூன்றுநாள் கருத்தரங்கில் “நவீன விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவளர்ச்சி” குறித்து பல்வேறு தலைப்புகளில் உரைநிகழ்த்த உள்ளனர்.
 210 ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய கருத்தரங்க மலரை துணைவேந்தர் அவர்கள் வெளியிட போலந்து நாட்டு பேரா. ஜெர்சிரேடாகிமுதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.  இக்கருத்தரங்கின் துவக்கவிழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் 250-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
 பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் கே. குருநாதன் வாழ்த்துரை வழங்கினார். ஆட்சிக் குழு உறுப்பினர் பேரா. ஜெ. ஜெயகாந்தன், தொழிலக வேதியியல் முன்னாள் துறைத் தலைவர் முனைவர் பி. மணிசங்கர், புலமுதன்மையர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்றனர்.
 அழகப்பா பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் வி. பாலச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார்.  தொழிலக வேதியியல் துறைப் பேராசிரியர் முனைவர் எச். குருமல்லே~; பிரபு நன்றி கூறினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து