எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பெய்ஜிங் : இந்தியா - சீனா உறவை தொடர்ந்து இயல்புநிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையேயான கருத்து பரிமாற்றம் மிகவும் முக்கியம் என்றும் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(எஸ்சிஓ) தற்போதைய தலைவராக சீனா உள்ள நிலையில், அந்த அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் இன்று (ஜூலை 15) நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக ஜெய்சங்கர் சீனா சென்றுள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு லடாக் எல்லையில் ஏற்பட்ட ராணுவ மோதலுக்குப் பிறகு முதல்முறையாக அவர் சீனா சென்றுள்ளார்.
சீன துணை அதிபர் ஹான் ஜெங்கை சந்தித்த ஜெய்சங்கர், இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடங்கி இருப்பது இந்தியாவில் பரவலாகப் பாராட்டப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். சர்வதேச நிலைமை மிகவும் சிக்கலானதாக உள்ள நிலையில், அண்டை நாடுகளாகவும் பெரிய பொருளாதாரங்களாகவும் உள்ள இந்தியாவும் சீனாவும் வெளிப்படைத் தன்மையுடன் கருத்துக்களைப் பரிமாரிக்கொள்வது மிகவும் முக்கியம் என ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
இன்று நடைபெற உள்ள எஸ்சிஓ வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில், எஸ்சிஓ அமைப்பின் உறுப்பு நாடுகளான சீனா, ரஷ்யா, இந்தியா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகிய 10 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


