Idhayam Matrimony

2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும்: இ.பி.எஸ். மீண்டும் திட்டவட்டம்

திங்கட்கிழமை, 14 ஜூலை 2025      தமிழகம்
Eps 024-12-03

சேலம், 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி  தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் கடந்த 7-ந்தேதி முதல் தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன்படி கோவை, விழுப்புரம், கடலூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 33 சட்டமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்து அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டினார். இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி 2-ம் கட்டமாக வருகிற 24-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 8-ந்தேதி வரை 7 மாவட்டங்களில் உள்ள 36 சட்டமன்ற தொகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளார்.

இந்தநிலையில், சேலத்தில் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

எனது சுற்றுப்பயணத்தில் மக்கள் மத்தியில் எழுச்சி இருப்பதை காண முடிகிறது.  தி.மு.க.  அரசுக்கு எதிரான மனநிலையில் தமிழக மக்கள் உள்ளனர். தேர்தலுக்கு 8 மாதங்கள் உள்ளன. அப்போது மேலும் சில கட்சிகள் அ.தி.மு.க. அணிக்கு வரும்.உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் முதல்வர் நாடகம் நடத்தி வருகிறார்.  .

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.  தி.மு.க. வால் மக்களுக்கு நன்மை இல்லை.  லாக்கப் மரணங்களை தடுக்க முடியவில்லை. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இழப்பீடு தர மனமில்லை. மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதைவிட வேறென்ன சாட்சி? 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும். அ.தி.மு.க. கூட்டணி வலிமையாக, ஒற்றுமையாக உள்ளது.  தேர்தல் நேரத்தில் பலம் பொருந்திய கூட்டணியாக அ.தி.மு.க. கூட்டணி அமையும். இவ்வாறு அவர் கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து