Idhayam Matrimony

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெறுவோம்: அ.தி.மு.க. அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும்: அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்

சனிக்கிழமை, 12 ஜூலை 2025      இந்தியா      அரசியல்
Amit-Shah 2023-11-26

சென்னை, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அமைக்கும் அரசின் அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும் என்று அமித்ஷா கூறினார். 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் 2026ல் தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பாகவும் பேசியிருக்கிறார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் வருவதற்கான சாத்திய கூறுகள் இருக்கிறதா? அதேபோல பா.ம.க. மற்றும் இதர சிறு கட்சிகள் கூட்டணிக்கு வருமா? என்று அமித்ஷாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், "அதைப் பற்றி தற்போது சொல்ல முடியாது. நாங்கள் பல கட்சிகளை ஒரே கூட்டணியில் கொண்டு வர முயற்சிக்கிறோம்" என்று கூறினார். தொடர்ந்து அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியின் வாய்ப்புகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு நாங்கள் அமோக வெற்றி பெறுவோம் என்று அமித்ஷா கூறினார்.

தொடர்ந்து தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கேற்குமா? என்ற கேள்விக்கு, 'ஆம்'  என பதில் அளித்தார். மேலும் தமிழ்நாட்டில் அதி.மு.க. அமைக்கும் அரசின் அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும் என்று அமித்ஷா கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து