முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் மீது 45 நாளில் தீர்வு : கூடுதல் தலைமை செயலாளர் உறுதி

திங்கட்கிழமை, 14 ஜூலை 2025      தமிழகம்
Amutha 2024 07 19

Source: provided

சென்னை :  ''உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும் என அரசு கூடுதல் தலைமை செயலாளரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா தெரிவித்தார்.

தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ் குமார், அமுதா ஆகிய நான்கு பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

இன்று தொடங்கப்பட உள்ள, ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே அரசின் சேவைகளை கொண்டு செல்வது இத்திட்டத்தின் நோக்கம். அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் மக்களுக்கு உரிய நேரத்தில் செல்ல வேண்டும் என முதல்வர் நினைக்கிறார்.

முகாம்கள் நடக்கும் ஒரு வாரத்திற்கு முன்பு வீடு, வீடாக சென்று மக்களுக்கு தெரியப்படுத்தப் படும். பொதுமக்களிடம் இருந்து பட்டா மாற்றம், மின் இணைப்பில் பெயர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் வருகின்றன. இதுவரை 1.05 கோடி கோரிக்கை மனுக்கள் பெறப்பட்ட நிலையில் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.

மக்கள் அதிகமாக கூடுகிற, வசிக்கிற இடங்களில் முகாம்கள் நடத்த உள்ளோம். மக்களுக்கு நாம முகாம் நடத்துவது தெரியப்படுத்த, முகாம் நடத்துவதற்கு முன்பாக தன்னார்வலர்களை அனுப்பி சிறப்பு திட்ட முகாம் நடத்த உள்ளோம். 45 நாட்களில் இந்த மனுக்களுக்கான தீர்வு காண வேண்டும் என முதல்வர் கூறியிருக்கின்றார். அதனை அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தி உள்ளோம்.

வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி என 4 நாட்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடைபெறும். இதற்காக ஒரு லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நவம்பர் வரை முகாம்கள் நடத்தப்பட உள்ளன. முன்பு 200 மக்கள் தொகைக்கு ஒரு முகாம் இருந்தது. இப்போது 10 ஆயரம் மக்கள் தொகைக்கு ஒரு முகாம். உங்களுடன் ஸ்டாலின் திட்டம் ஆவணங்களை முறையாக கொண்டு வரும் மக்களின் மனு மீது உடனடியாக தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து