திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது

புதன்கிழமை, 19 ஜூலை 2017      தூத்துக்குடி

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

 வைகுண்டர் அவதாரபதி

திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 185&வது வைகுண்டர் ஆண்டு ஆடி திருவிழா வருகிற நாளை(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 31&ந் தேதி வரை நடக்கிறது. அவதராபதியில், திருவிழாவின் முதல் நாளான நாளை காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் ஆடித்திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. பின்னர் 7 மணிக்கு புஷ்ப வாகனத்தில் அய்யா பவனி நடக்கிறது. பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடைக்கு பின்னர் அன்னதர்மம் நடக்கிறது. மாலை 3 மணிக்கு திருஏடு வாசிப்பும், மாலை 5 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடையும், மாலை 6 மணிக்கு புஷ்ப வாகனத்தில் அய்யா பவனியும் நடக்கிறது-.

31ந தேதி தேரோட்டம

 திருவிழா காலங்களில் ஒவ்வொரு நாளும் அய்யா வைகுண்டர், புஷ்ப வாகனம், அன்ன வாகனம், சர்ப வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், இந்திர வாகனம், காளை வாகனம் என ஒவ்வொரு வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். வருகிற 31&ந் தேதி 11&ம் திருநாள் தேரோட்டத்தையட்டி, அன்று காலை 6 மணிக்கு உகப்படிப்பு, பணி விடையும் நடக்கிறது. பின்னர் பகல் 12.05 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தொடர்ந்து அன்னதர்மம் வழங்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் சுந்தரபாண்டி, செயலாளர் வள்ளியூர் தர்மர், கௌரவ தலைவர் நடேச நாடார், பொருளாளர் ராமையா நாடார், துணை செயலாளர் ராஜேந்திரன் நாடார் மற்றும் இணை தலைவர்கள், இணை செயலாளர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து