செங்கோட்டை எஸ்எம்எஸ்எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இயக்கம் செங்கோட்டை வட்டார வள மையத்தின் சார்பில் பிறந்த குழந்தைகள் முதல் 18 வயதுவரை உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் நடந்தது.
மருத்துவ முகாம்
முகாமிற்கு தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் சுடலை தலைமைதாங்கினார். மண்டல துணை வட்டாட்சியர் புகாரி, உதவி தொடக்க கல்வி அலுவலர் மேரிகிரேஸ்ஜெபராணி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியை பன்னீர்செல்வம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் சாஸ்திரி ஆகியோர் முன்னிலைவகித்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் இராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தென்காசி வேளாண்மைத்துறை துணை அலுவலர் ஷேக்மைதீன், வாசகர் வட்ட இணைச்செயலாளர் செண்பகக்குற்றாலம், நூலகர் இராமசாமி, என்எஸ்எஸ் மாவட்ட திட்ட அலுவலர் ஜீவா ஆகியோர் பேசினர்.
பல்வேறு சேவைகள்
முகாமில் கண்மருத்துவர் இசைவாணி, மனநல மருத்துவர் நிர்மல், காது,மூக்கு,தொண்டை மருத்துவர் அமுதா, எலும்பு முறிவு மருத்துவர் மணிகண்டராஜ், ஒலிஅளவீட்டாளர் மருத்துவர் தனலெஷ்மி ஆகியோர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள், உதவி உபகரணங்கள் வழங்குதல், அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்தல், அரசு சிறப்புநலத்திட்டங்களை பெற்று வழங்குதல் உள்பட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டது. முகாமில் செங்கோட்டை ஒன்றியத்திற்குப்பட்ட சுமார் 150மேற்ப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் பயிற்றுநர் லலிதா நன்றி கூறினார்.