முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேகப்பந்து வீச்சாளர் முனாப் படேல் ஆஜராக டெல்லி நீதிமன்றம் சம்மன்

வெள்ளிக்கிழமை, 28 ஜூலை 2017      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி, இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாப் படேலுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு  உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளராக விளங்கியவர் முனாப் படேல். காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள அவருக்கு செக் பவுன்ஸ் வழக்கில் டெல்லி மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. அகர்வால் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த சம்மன் அனுப்பட்டுள்ளது.

நிவாஸ் புரமோட்டார்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் இருந்து ரூ. 25 லட்ச ரூபாய்க்கு செக் வாங்கியதாகவும், அதை வங்கியில் செலுத்திய போது, பணம் இல்லாமல் திரும்பியதாகவும், இதுகுறித்து முறைப்படி அனுப்பிய வக்கீல் நோட்டீஸுக்கு அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் பதிலளிக்கவில்லை என கோரி மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில், அகர்வால் வழக்கு தொடர்ந்தார்.


இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுதாரர் கூறிய குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளதாக கூறி வரும் நவம்பர் -1 ஆம் தேதி நிறுவனத்தின் 7 பங்குதாரர்களும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த நிறுவனத்தில் பங்குதாரர்களில் ஒருவராக முனாப் படேலும் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து