முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவட்ட வருவாய் அலுவலர் சி முத்துக்குமரன் தலைமையில் செவல்பட்டி கிராமத்தில் அம்மா திட்டம் முகாம்

வெள்ளிக்கிழமை, 4 ஆகஸ்ட் 2017      விருதுநகர்
Image Unavailable

 மாவட்ட வருவாய் அலுவலர்  சி முத்துக்குமரன்   தலைமையில்  செவல்பட்டி கிராமத்தில் அம்மா திட்டம் முகாம்
விருதுநகர் -விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், செவல்பட்டி ஊராட்சி, செவல்பட்டி கிராமத்தில் அம்மா திட்டம் முகாம் மாவட்ட வருவாய் அலுவலர்  சி.முத்துக்குமரன்  தலைமையில்  நடைபெற்றது
பின்னர்;; மாவட்ட வருவாய் அலுவலர்  சி.முத்துக்குமரன்  தெரிவித்ததாவது:-
மக்களை தேடி அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் வருவதற்கு காரணம், அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள் பற்றியும்; அதற்கான தகுதிகள் பற்றியும் அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் தான் இம்முகாம் நடத்தப்படுகிறது. இம்;முகாமில்  பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறைசார்ந்து என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பதை எடுத்துரைத்தனர். மேலும் கால்நடை துறையின்; மூலமாக கால்நடைகளுக்கு இலவச சிகிச்சைகள் அளிக்க கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் 18.08.17 அன்று அன்னபூரணியாபுரம் கிராமத்திலும், 25.10.17 அன்று அம்மையார்பட்டி கிராமத்திலும் நடைபெறவுள்ளது. மேலும், விருதுநகர் மாவட்டம் முழுவதும்; செப்டம்பர் மாதம் முதல் கோமாரி நோய் தடுப்பூசி முகாமும் நடைபெறும் என்றும், பொது மக்கள் தங்களின் கிராமத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துகொள்ள வேண்டும் என்றும், தனிநபர் இல்லக்கழிப்பறை கட்டுவதற்கு முன்;;;வர வேண்டும் என்றும், விவசாயம்   , வீட்டு உபயோகம்  , மண்பாண்டம் செய்வதற்கு தேவையான வண்டல் மண்  , சவுடுமண்  , கிராவல் போன்ற கனிமங்களை அரசாணையில் நிர்ணயிக்கப்பட்ட அளவு இலவசமாக எடுத்து விநியோகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே  விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, தங்களின் விவசாய நிலங்களை மேம்படுத்த முன்வர வேண்டும்;.
விருதுநகர் மாவட்டத்தில் 5ம் கட்ட சுழற்சி முறையின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் வெள்ளிக்கிழமை தோறும் அனைத்து வட்டங்களிலும், வருவாய் கிராமத்தை தலைமையிடமாக கொண்டு, துணை ஆட்சியர் நிலையில் உள்ள அரசு அலுவலர்கள் தலைமையில் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றிற்கு உடனடி தீர்வு காணும் விதமாக ‘அம்மா திட்டம்” முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தமிழக அரசு பொதுமக்கள் நலனுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்கள் அனைத்தும் கிராமங்களில் வசிக்கும் கடைகோடி மக்களுக்கு சிரமமின்றி சென்றடைவதை உறுதிப்படுத்தும் வகையில் அம்மா திட்ட முகாம் அமைகின்றது. மேலும், அம்மா திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல்கள் (உட்பிரிவு இல்லாத இனங்கள்), குடும்ப அட்டைகளில் மேற்கொள்ள வேண்டிய  ்தங்கள், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை,  ண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் மக்களிடமிருந்து பெறப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டு வருகிறது.
பின்னர்;, செவல்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு துணை சுகாதார நிலையம், அங்கன் வாடி மையம் போன்றவற்றை நேரில் சென்று ஆய்வு செய்தார்கள். முன்னதாக, செவல்பட்டி கிராமத்தை சேர்ந்த 10 பயனாளிகளுக்கு மின்னணு குடும்;ப அட்டைகளை வழங்கினார்கள்.
மேலும், இம்முகாமில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத் துறையின் மூலமாக நடமாடும் மருத்துவமணை, முதியோர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பரிசோதனைக்கு வரும் அனைத்து பொதுமக்களுக்கும் இலவச கண் பரிசோதனை செய்யப்படுகிறது. பொதுமக்களைத் தேடிச்சென்று குறைதீர்க்கும் தமிழக அரசின் சிறப்பான இத்திட்டத்தினை மக்கள் பயன்படுத்தி பெரிதும் பயன்பெற வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலர்  சி.முத்துக்குமரன்  தெரிவித்தார்கள்.
 இம்முகாமில் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி)  முருகேசன், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர்(பொ)  செந்தில் ஆறுமுகம், வட்டாட்சியர்(வெம்பக்கோட்டை)  மனோகரன், அரசு அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து