முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க முடியாது : இலங்கை அமைச்சர் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 20 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

கொழும்பு : போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் திலக் மாரப்பன் தெரிவித்துள்ளார்.

புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட திலக்  தனது அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

“இலங்கை சட்ட விதிகளின்படி போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க முடியாது. இதனை சர்வதேச சமூகத்திடம் எடுத்துரைத்துள்ளோம். அவர்களும் எங்கள் கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த உள்நாட்டுப் போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பாக சர்வதேச நீதிபதிகள் அடங்கிய குழு விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் சர்வதேச நீதிபதிகளை ஏற்கமாட்டோம் என்று இலங்கை அரசு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோரை காணவில்லை. இதுதொடர்பாக அவர்களுடைய உறவினர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போர்க்குற்றம் குறித்து சர்வதேச நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து