நினைவாற்றலை அதிகப்படுத்தும் இலந்தைப்பழம்

செவ்வாய்க்கிழமை, 22 ஆகஸ்ட் 2017      வாழ்வியல் பூமி
ilandhai 2

Source: provided

இலந்தைப்பழத்தின் தாயகம் சீனா, இதனை ஆங்கிலத்தில் ஜூஜூபி என அழைப்பர்.  இந்தப்பழத்தின் மேல் தோல் நல்ல சிவப்பு நிறத்துடன் மினுமினுப்பாக இருக்கும்.  இதன் அளவு சுண்டைக்காய் அளவு பெரியதும், சிறியதுமாக இருக்கும்.  இலந்தைப்பழத்தின் மேலுள்ள தோல் மெல்லியதாக இருந்தாலும் உறுதியானதாக இருக்கும்.  இந்தப்பழத்தின் சுவை இனிப்பும், புளிப்பும் கலந்து இருக்கும்.  இலந்தைக்கனி மிக அதிகமான மருத்துவகுணம் கொண்ட ஒரு கனியாக விளங்குகிறது.  100 கிராம் இலந்தையில் 74 சதவிகிதம் கலோரி, 17 சதவிகிதம் மாவுப்பொருள், 0.8 சதவிகிதம் புரதம் மற்றும் தாது உப்புகள், இரும்புசத்துக்கள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது.

இலந்தைப்பழம் உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது.  குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம்.  இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் இதைச் சாப்பிடலாம்.  இலந்தைப்பழம் போல அதன் இலையிலும் அதிக மருத்துவ சக்திகள் உள்ளது.  இதன் இலையை மைபோல அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம் பெறலாம்.  கட்டிகள் மீது இந்தக்கலவையை வைத்து கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.  முடியிலுள்ள புழுவெட்டு நீங்கும்.  இலந்தை இலைச் சாற்றினை உள்ளங்கை, கால்களில் தினமும் பூசி வர அதிக வியர்வை சுரப்பது கட்டுப்படும்.  உடலில் பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல் போன்ற பல நோய்கள் உண்டாக வாய்ப்பு உண்டு.

மேலும் பித்த நீர் அதிகரிப்பால் இரத்த சீர்கேடு உண்டாகும். இவற்றைப் போக்கி, பித்தத்தைச் சமநிலைப்படுத்தும் குணம் இலந்தைக்கு உண்டு.  இலந்தைப்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்தும், சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால் எலும்பு, பற்களுக்கு உறுதி உண்டாகும். உடலில் பலம் ஏறும். இலந்தை மரத்தின் உள்பட்டைகளை உலர்த்திப் பொடி செய்து, தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசி வர ஆறாத புண்கள் ஆறும்.  பகல் உணவிற்கு பிறகு இலந்தைப்பழத்தை உட்கொண்டால் செரிமானம் உண்டாவதுடன் பித்தமும் கபமும் சாந்தமுறும்.  பழத்தை உலர்த்தி கொட்டையை நீக்கி உட்கொண்டால் கபத்தை வெளிக் கொண்டு வரும். 

இலந்தை மரத்தின் வேரை அரைத்துப் பூச, மூட்டுவலி குணமாகும்.  வேர்ப்பட்டையை இடித்துப் பிழிந்த சாற்றை 15மி அளவு குடிக்க மலச்சிக்கல் குணமாகும்.  உடலில் சுண்ணாம்புச்சத்து (கால்சியம்) குறைவதால் எலும்புகள் பலமிழந்து காணப்படும்.  இதனால் லேசாக கீழே விழுந்தால்கூட எலும்புகள் உடையும்.  கால்சியம் சத்து குறைவாக உள்ளவர்கள் இலந்தைப்பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும்.  தினமும் காலையில் உணவிற்குப் பிறகு 5 முதல் 10 இலந்தைப்பழங்களை சாப்பிட்டு வந்தால் பித்தம், மயக்கம், வாந்தி, வாய் குமட்டல் குணமாகும்.  பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கவும், அதிக உதிரப்போக்கை தடுக்கவும் இலந்தைப்பழம் பயன்படுகிறது.
 
கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளில் ஏற்படும் தேய்மானத்தைக் கட்டுப்படுத்தி, மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் சத்து இழப்புகளை ஈடுசெய்யும்.  சிலருக்கு அடிக்கடி உடல்வலி, உடல் சோர்வு ஏற்படும். இந்த உடல்வலியைப் போக்கி உடலைத் தெம்பாக்க இலந்தைப்பழம் நல்ல மருந்தாகும்.  பசியில்லாமல் அவதிப்படுபவர்களுக்கும், சிறிது சாப்பிட்டால்  கூட செரிமானம் ஆகாமல் இருப்பவர்களும் இலந்தைப்பழத்தின் விதையை நீக்கிவிட்டு பழச்சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி வைத்துக்கொண்டு, காலையும் மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கவும் செய்யும்.  பேருந்தில் பயணம் செய்யும் போது வாந்தி, தலைச்சுற்றல் ஏற்படுவோர் இலந்தைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் வாந்தி, தலைச்சுற்றல் ஏற்படாது.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து