முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல : எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூலை 2025      தமிழகம்
EPS 2024-04-10

Source: provided

திருத்துறைப்பூண்டி : ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்தில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதியில் தனது பிரசாரத்தை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டார்.

திருத்துறைப்பூண்டியில் பிரசார பஸ்சில் நின்றபடி எடப்பாடி பழனிசாமி பேசியதாது:-  எடப்பாடி பழனிசாமி அவரது உறவினர் வீட்டில் ரெய்டு நடந்ததால் தான் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து இருப்பதாக அமைச்சர் ஒருவர் பேசியிருக்கிறார். கீறல் விழுந்த ரெக்கார்டு மாதிரி இதை எத்தனை முறைதான் சொல்லிக்கொண்டே இருப்பீர்கள்.  

நான் சொந்த காலில் நின்று உழைத்து கட்சி தொண்டர்கள் ஆதரவு பெற்று இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன். அப்படியென்றால் எந்த அளவுக்கு உழைத்து இருப்பேன் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். யாருடைய சிபாரிசு மூலமும் வரவில்லை.  அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை பார்த்து முதல்வருக்கு பயம் வந்துவிட்டது. பா.ஜ.க.வுக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பார்களா? என்று எதிர்க்கட்சியினர் கேட்கிறார்கள்.  நாங்கள் ஒன்றும் எமாளி அல்ல... அ.தி.மு.க. பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எங்களுக்கு எதைப்பத்தியும் கவலையில்லை.

தி.மு.க.வை அகற்ற வேண்டும் என்ற கொள்கையில் ஒத்த கருத்துடைய கட்சிகள் இணையணும். அதுதான் எங்கள் நிலைப்பாடு. தி.மு.க.வை அகற்றவேண்டும் என்று பா.ஜ.க.வும் கருதுகிறது. அதே நிலைப்பாடோடு தான் பா.ஜ.க. எங்களுடன் கூட்டணி வைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து