எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மாஸ்கோ : ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யாவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் பசிபிக் கடற்கரையில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உட்பட மூன்று நிலநடுக்கங்கள் பதிவானதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று 6.7 மற்றும் 5 ரிக்டர் அளவிலான தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் கம்சட்கா மண்டலத்தின் தலைநகரான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கிக்கு கிழக்கே சுமார் 140 கிமீ தொலைவில் ஏற்பட்டன. இந்த பகுதியில் 180,000 க்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர்.
இந்த நிலநடுக்கங்கள் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி கடற்கரையில் அடுத்தடுத்து 32 நிமிடங்களுக்குள் தாக்கின. இதன் பின்னர் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 20 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதையடுத்து ரஷ்யாவின் சில பகுதிகளுக்கு அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கையை விடுத்தது.
பசுபிக் பெருங்கடலுக்கு அருகே உள்ள பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி பகுதியானது ஜப்பானின் வடகிழக்கிலும், அமெரிக்க மாநிலமான அலாஸ்காவின் மேற்கிலும் அமைந்துள்ளது. கம்சட்கா தீபகற்பம் பசிபிக் மற்றும் வட அமெரிக்க டெக்டோனிக் தகடுகள் சந்திக்கும் இடமாகும், இது ஒரு நில அதிர்வு வெப்ப மண்டலமாக அமைந்துள்ளது. இப்பகுதியில் 1900ம் ஆண்டு முதல் 8.3 ரிக்டருக்கு மேற்பட்ட ஏழு பெரிய நிலநடுக்கங்கள் தாக்கியுள்ளன. நவம்பர் 4, 1952 அன்று, கம்சட்காவில் 9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


