முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமான விபத்து பற்றி உள்நோக்கத்துடன் செய்தி : மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூலை 2025      இந்தியா
Rammohan-Naidu 2025-07-20

Source: provided

 புதுடில்லி : ஏர் இந்தியா விமான விபத்து பற்றி மேற்கத்திய ஊடகங்கள் உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடுவதாக, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பாக அவர் கூறியதாவது: மேற்கத்திய ஊடகங்கள் வெளியிட விரும்பும் செய்திகளுக்கு உள்நோக்கம் இருக்கலாம். விமான விபத்து புலனாய்வுப் பணியகம், விசாரணை முடியும் வரை பொறுமையுடன் இருக்கும் படி வேண்டுகோள் விடுத்துள்ளது. எனவே யூகங்களை தவிர்க்கும் படி மேற்கத்திய ஊடகங்களை கேட்டுக்கொள்கிறேன். 

முழு கருப்புப் பெட்டியையும் டிகோட் செய்வதிலும், இந்தியாவிலேயே தரவை ஆய்வு செய்வதிலும் விமான விபத்து புலனாய்வு பணியகம் அற்புதமான வேலையைச் செய்துள்ளனர்.  இது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றியாகும். ஏனென்றால் முந்தைய சம்பவங்களில், கருப்புப் பெட்டி சேதம் அடைந்ததாகக் காணப்பட்ட போதெல்லாம், தரவுகளை மீட்டெடுக்க அது எப்போதும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஏர் இந்தியா விமான விபத்தில், விமான விபத்து புலனாய்வு பணியகம் அனைத்தையும் வெற்றிகரமாக டிகோட் செய்திருப்பது இதுவே முதல் முறை.

தரவு இங்கே உள்ளது. முதற்கட்ட அறிக்கையும் வெளியிடப்பட்டு உள்ளது. இறுதி அறிக்கை வரும் வரை எந்தக் கருத்தையும் தெரிவிப்பது, யாருடைய சார்பாகவும் ஒரு நல்லதாக இருக்கும் என்று நான் நினைக்க வில்லை. நாங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறோம். முதற்கட்ட அறிக்கையை முழுமையாகப் படித்து வருகிறோம். மேலும் பாதுகாப்பு வசதிகள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். சம்பவம் மற்றும் விசாரணையைப் பொறுத்த வரை, நாங்கள் எதையும் சொல்வதற்கு முன் இறுதி அறிக்கைக்காக காத்து இருக்கிறோம். இவ்வாறு மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து