Idhayam Matrimony

'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றி பாராளுமன்றத்தில் பேச மத்திய அரசு தயார்: அமைச்சர் கிரண் ரிஜிஜூ உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூலை 2025      இந்தியா
Kiran-Rijiju 2024-11-18

Source: provided

புதுடில்லி : ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாராளுமன்றத்தில் மத்திய அரசு பேச தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறி உள்ளார்.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) தொடங்கி ஆக.21 வரை நடக்கிறது. சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக ஆக.13 மற்றும் ஆக.14 ஆகிய தேதிகளில் மட்டும் கூட்டம் நடைபெறாது. கூட்டத்தொடரை எப்படி சுமூகமாக நடத்துவது என்பது குறித்து டில்லியில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தலைமை ஏற்றார். கூட்டம் முடிந்து வந்த அவர் நிருபர்களிடம் பேசினார்.

அவர் பேசியதாவது:- பஹல்காம் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் உட்பட அனைத்து முக்கியமான பிரச்னைகளையும் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் அது பாராளுமன்ற விதிகளின்படி இருக்க வேண்டும். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அனைத்து பரிந்துரைகளையும் நாங்கள் கேட்டுள்ளோம். அனைத்துக் கேள்விகளுக்கும் மத்திய அரசு பதிலளிக்கும். பாராளுமன்றத்தின் உள்ளே தான் பதில் அளிப்போமே, தவிர வெளியே இல்லை என்றார்.

பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் போன்ற நடவடிக்கைகளுக்கு பின்னர் நடக்கும் முதல் கூட்டத்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து