எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், நேற்று மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) தொடங்கி ஆகஸ்ட் 21 வரை நடைபெறுகிறது.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கே. சுரேஷ் மற்றும் ஜெய்ராம் ரமேஷ், சிவசேனா எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே, மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல், என்சிபி (சரத் பவார் அணி) எம்.பி. சுப்ரியா சுலே, பாஜக எம்.பி. ரவி கிஷன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், சமாஜ்வாதி கட்சி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, ஐக்கிய ஜனதா தளம், அதிமுக, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்பி மஹுவா மாஜி, “ஜார்க்கண்ட் மிகவும் பணக்கார மாநிலமாக இருக்க வேண்டியது, இம்மாநிலத்தில் ஏராளமான கனிம வளங்கள் உள்ளன. ஆனால் அது மூன்று ஏழ்மையான மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, மத்திய அரசு ஜார்க்கண்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. எங்கள் மாநிலத்திற்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கவேண்டும்” என்றார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் பதிலடி தாக்குதலுக்குப் பிறகு நடக்கும் முதல் பாராளுமன்றக் கூட்டத்தொடர் இதுவாகும். இந்தியா - பாகிஸ்தான் போரை ட்ரம்ப் நிறுத்தியதாக கூறுவது குறித்தும் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் கேள்விகள் எழுப்ப உள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


