முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டமன்றக் கூட்டத்தில் செல்போனில் ரம்மி விளையாடிய மகாராஷ்டிர விவசாயத்துறை அமைச்சர்

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூலை 2025      இந்தியா
Online-rummy 2024-05-29

Source: provided

மும்பை : மகாராஷ்டிர மாநில விவசாயத்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே, சட்டமன்ற கூட்டத்தொடரின் போது செல்போனில் ரம்மி விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

ஆளும் கூட்டணியில் உள்ள அஜித் பவார் தேசியவாத காங்கிரசை சேர்ந்தவர் மாணிக்ராவ் கோக்டே. எதிரணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவரின் பேரன் ரோஹித் பவார் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில் மராத்தியில், "ஆளும் கூட்டணியில் தேசியவாத கட்சி பா.ஜ.க.வை கலந்தாலோசிக்காமல் எதுவும் செய்ய முடியாது என்பதால், எண்ணற்ற விவசாயப் பிரச்சினைகள் நிலுவையில் உள்ளபோதும், மாநிலத்தில் தினசரி 8 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும்போதும், வேளாண் அமைச்சருக்கு வேறு எந்த வேலையும் இல்லாததால், ரம்மி விளையாடுவதற்கு நேரம் கிடைத்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "பயிர் காப்பீடு, கடன் தள்ளுபடி மற்றும் விலை ஆதரவு கோரும் விவசாயிகளின் அவலக் குரலை இந்த தவறான அமைச்சர்களும், அரசாங்கமும் எப்போதாவது கேட்பார்களா. ஏழைகளின் வயல்களுக்கு எப்போதாவது வாருங்கள், மாகாராஜாவே" என்று தெரிவித்தார் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து