முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் 5 நாட்களில் 2-வது ரயில் விபத்து: 74 பேர் படுகாயம்

புதன்கிழமை, 23 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

லக்னோ, உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 5 நாட்களில் நேற்று 2-வது முறையாக ரயில் விபத்து ஏற்பட்டது. ரயில் மீது  டம்பர் மோட்டார் வாகனம் மோதியதில் ரயிலின் 7 பெட்டிகள் தடம்புரண்டன. இதில் 74 பயணிகள் காயம் அடைந்தனர்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் அடிக்கடி ரயில் விபத்து நடந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை அன்று ஒடிசாவில் உள்ள புனித ஸ்தலமான பூரியில் இருந்து உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள புனித ஸ்தலமான ஹரித்வாருக்கு சென்று கொண்டியிருந்த பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் உத்திரப்பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் உள்ள முஜாபர் நகருக்கு அருகே விபத்துக்குள்ளானதில் 22 பலியானார்கள் மற்றும் 150 பேர் படுகாயம் அடைந்தனர்.  இந்த விபத்து நடந்த 5 நாட்களுக்குள் மற்றொரு பயணிகள் விபத்து அந்த மாநிலத்தில் நடந்துள்ளது. கைபியாத் பயணிகள் ரயிலான அஜம்ஹர் நகரில் இருந்து டெல்லிக்கு சென்றுகொண்டியிருந்தது. ரயிலான பாட்னா நகரை தாண்டி உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒளரைய்யா மாவட்டத்திற்கு அருகில் சென்றுகொண்டியிருந்தபோது ரயில்பாதை வேலைக்காக மணல் ஏற்றிவந்த டம்பர் மோட்டார் வாகனமானது  இந்த ரயில் மீது மோதியதில் ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. இதில் 74 பயணிகள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சைபா மற்றும் எடவா மருத்தவமனைகளுக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ரயில் விபத்தில் 25 பேர்தான் காயம் அடைந்தனர் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. டம்பரானது ரயில்வே துறைக்கு சொந்தமானது அல்ல. விபத்தானது நேற்றுமுன்தினம் அதிகாலை 2.30 மணிக்கு நடந்துள்ளது என்றும் பாட்னா நகருக்கும் அச்சல்டா ரயில்வே நிலையங்களுக்கிடையே இந்த விபத்து நடந்ததுள்ளது என்று வட-மத்திய ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால் விபத்தில் 74 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சைபா மற்றும் எடவா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று உத்திரப்பிரதேச மாநில உள்துறை முதன்மை செயலாளர் அரவிந்த் குமாரும் ஒளரைய்யா மாவட்ட போலீஸ் அதிகாரி சஞ்சீவி தியாகியும் தெரிவித்துள்ளனர்.

பாதை அமைப்பதற்காக மணல் ஏற்றிவந்த டம்பர் மோட்டார் வாகனமானது ஆளில்லாத லெவல் கிராஸை கடக்கும்போது எதிரே வந்த கபியாத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியதில் ரயில் விபத்துக்குள்ளானது என்று உள்துறை செயலாளர் பகவான் ஸ்வர்ப் தெரிவித்தார்.

டம்பர் மோட்டார் வாகனமானது ரயில்வே தடுப்பை மோதி வந்துகொண்டியிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜின் மீது மோதியது. இதில் 25 பேர் காயம் அடைந்தனர் என்று மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டம்பர் மோட்டார் வாகனமானது ரயிலின் என்ஜின் மீது மோதியதால்தான் ரயில் தடம்புரண்டது என்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பிரபுல் படேலும் தெரிவித்துள்ளார். காயம் அடைந்த பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சூழ்நிலையை நான் தனிப்பட்ட முறையில் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக ரயில்வே உயரதிகாரிகள் அனுப்பப்பட்டனர். மீட்புப்பணிகள் முடிந்துவிட்டது. அந்த வழியாக ரயில்போக்குவரத்து தொடங்கியது என்றும் அமைச்சர் பிரபுல்படேல் மேலும் தெரிவித்துள்ளார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து