உ.பி.யில் வட்டார பா.ஜ. தலைவர் சுட்டுக்கொலை

சனிக்கிழமை, 2 செப்டம்பர் 2017      அரசியல்
uttar-pradesh-map

காஜியாபாத், உத்திரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வட்டார தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவருடன் வந்தவர் துப்பாக்கிக்குண்டு காயத்துடன் ஆபத்தான நிலையில் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காஜியாபாத்தில் உள்ள காஜியாபாத் வட்டார தலைவராக கஜேந்திர பதி இருக்கிறார். இவரும் இவரது நண்பர் பல்பீர் செளகானும் ஒரு மோட்டார் பைக்கில் நகர காலனி பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது இரண்டு பேர் ஒரு பைக்கில் சென்று கஜேந்திர மோட்டார் பைக் அருகே நிறுத்தியுள்ளனர். பின்னர் அவர்களில் ஒருவர் தான் மறைந்து வைத்திருந்த ரிவால்வர் துப்பாக்கியை எடுத்து கஜேந்திர பதியையும் பல்பீரையும் சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் காஜியாபாத்துக்கு அருகில் உள்ள நொய்டா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கொண்டு செல்லும் வழியில் கஜேந்திர பதி இறந்துவிட்டார். பல்பீர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று காஜியாபாத் மாநகர போலீஸ் அதிகாரி அருண் குமார் சிங் தெரிவித்தார்.

இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் பாரதிய ஜனதா ஆதரவாளர்கள் மருத்துவமனை முன்பு கூடிவிட்டனர். இதனால் அசம்பாவித சம்பவம் எதுவும் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றும் சிங் மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து