முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனமழையால் முழு கொள்ளவை எட்டிய சோத்துப்பாறை அணை

வியாழக்கிழமை, 14 செப்டம்பர் 2017      தேனி
Image Unavailable

  தேனி -பெரியகுளத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சோத்துப்பாறை அணை. கடந்த இரண்டு ஆண்டுகளாக அணையின் நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்தானது மிகவும் குறைவாக இருந்தது. மேலும் பெரியகுளம் நகருக்கு தினமும் 3 கன அடி தண்ணீர் திறந்து விடுவதாலும், வெய்யிலின் தாக்கத்தாலும் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறையத் தொடங்கியது.  இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ய தொடங்கியது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது. அணையின் நீர்மட்டம் 121.5 அடியை நெருங்கியபோது முதல் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டது. இந்நிலையில்  நேற்று இரவு அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டியது. மேலும் அணைப்பகுதியில் சுமார் 30 மி.மீ மழை பதிவாகியுள்ள நிலையில்  அணைக்கு வரும் உபரி நீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் வராகநதியில் வெள்ளப் பெருக்கு அபாய எச்சரிக்கையை பொதுப்பணித்துறையினர் விடுத்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு பின் சோத்துப்பாறை அணை நிரம்;பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் சோத்துப்பாறை அணையின் நீர்தேக்கப் பகுதிகளில் தூர்வாரும் பணியை பொதுப்பணித்துறையினர் விரைந்து மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து