முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வத்தலக்குண்டில் ஐம்பொன் சாமி சிலைகள் கடத்திய வாலிபர் கைது சிலைகள் பறிமுதல்

வெள்ளிக்கிழமை, 22 செப்டம்பர் 2017      திண்டுக்கல்
Image Unavailable

 வத்தலக்குண்டு -வத்தலக்குண்டில் ஐம்பொன் சாமி சிலைகள் கடத்திய வாலிபர் கைது சிலைகள் பறிமுதல் பறிமுதல் செய்தனர். இதற்கு  உடைந்¬யாக இருந்த கல்லூரி மாணவர்களுக்கு வலைவீசி தேடி வருகிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காவல்நிலையத்திற்கு வத்தலக்குண்டு பைபாஸ் சாலையில் சிலைகள் கடத்தப்பட இருப்பதாக தொலைபேசியில் ரகசிய தகவல் வந்தது. தகவலின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில்  டி.எஸ்.பி.கார்த்திகேயன் வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் சப்இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் தலைமை காவலர்கள் ராமு, முத்துசெல்வம், தனிப்பிரிவு காவலர் சுரேந்திரன், காவலர் விஜயக்குமார் ஆகியோர் விரைந்து சென்று பைபாஸ் சாலையை சோதனை நடத்தினர். அப்போது பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த மாடு புரோக்கர்கள் பாலகிருஷ்ணன், சந்தானமூர்த்தி ஆகியோர் சாக்குமூடையோடு நின்றிருந்தனர். அவர்களை போலீசார் விசாரணை செய்த போது ஆத்தூர் ஒன்றியம் சித்தையன்கோட்டை அருகே சேடபட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் ரஞ்சித் வயது 28 என்பவர் தங்களிடம் சிலைகளை வைத்திருக்க சொல்லி கொடுத்துவிட்டு சென்றதாக கூறினார். Êசாக்குமூட்டையில் 70 செ.மீ உயரம், 72 செ.மீ அகலம் உள்ள சுமார் 16 கிலோ எடையும் உள்ள ஐம்பொன்னாலான கிருஷ்ணன் சிலை ஒன்றும், 45 செ.மீ உயரம், 35 செமீ அகலமுள்ள 10 கிலோ எடையுள்ள அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலையும் இருந்தது. சிலைகளை பறிமுதல் செய்த போலீசார் ரஞ்சித்தை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீஸ் விசாரணையில் தெரியவருவதாவது, மாட்டு புரோக்கர் சந்தானமூர்த்தி குழந்தைகளுக்கு தொக்கு எடுத்து மாந்தீரிகம் செய்பவர் அவரிடம் தனது குழந்தையை தொக்கு எடுப்பதற்காக ரஞ்சித் கொண்டு சென்ற போது அவர்களிடையே பழக்கம் ஏற்பட்டது.  அதன் பிறகு ஒரு நாள் ரஞ்சித் மாட்டு புரோக்களிடம் சென்று என்னிடம் கல்லூரி மாணவர்களிடம் வாங்கிய கிருஷ்ணன் மற்றும் புத்தர் சிலைகள் உள்ளன அவற்றை உங்களிடம் கொண்டு வந்து தருகிறேன் அதை வைத்திருங்கள் என்று கூறியதாக விசாரணையின் தெரியவந்தது. போலீசார் ரஞ்சித்தை நிலக்கோட்டை குற்றவியல¢ நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ரிஜானாபர்வீன் முன்னிலையில் ஆஜர் செய்தனர். பறிமுதல் செய்த சிலைகளை திண்டுக்கல் ஐகான் (சிலை பாதுகாப்பு மையம்) சென்டருக்கு  கொண்டு சென்றனர். சிலைகளுடைய மதிப்பும் அதைப்பற்றிய ஏனைய விபரங்களும் சிலைகடத்தல் பிரிவு போலீசார் ஆய்வு செய்த பிறகு முழுமையாக தெரியவரும் என்றும், கல்லூரி மாணவர்கள் சிலை கடத்தலில் தொடர்பு கொண்டு இருப்பதால் தொடர்ந்து அவர்களை தேடி வருகிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து