முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உச்சப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மாநில அளவில் தூய்மைப் பள்ளிக்கான விருது: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கி பாராட்டினார்:

ஞாயிற்றுக்கிழமை, 24 செப்டம்பர் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற விழாவில் மதுரை மாவட்டம் உச்சப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தூய்மைப் பள்ளிக்கான விருதினை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதனால் உச்சப்பட்டி கிராமமக்கள் மற்றும் பள்ளியில் பயிலும் மாணவ,மாணவியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழக பள்ளிக் கல்வித்துறை மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் சென்னை கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நினைவு நூலக மண்டபத்தில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தூய்மைப் பள்ளிகளுக்கு விருது வழங்கிடும் விழா சிறப்பாக நடைபெற்றது.பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தூய்மைப் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கி வாழ்த்திப் பேசினார்.இதில் மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியத்தைச் சேர்ந்த உச்சப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 1957-ம் ஆண்டு ஆரம்பப்பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டு 2004ம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு தற்போது 241 மாணவ,மாணவியருடன் தூய்மையான குடிநீர் வசதியுடன் சுத்தம் மற்றும் சுகாதாரம் சார்ந்து சிறப்பாக செயல்பட்டதற்காக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மாநில அளவிலான தூய்மைப்பள்ளி விருதினை(ஸ்வாட்ச் வித்யாலயா புரஸ்கார்) பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி.சாந்தியிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இதில் மற்றொரு சிறப்பம்சமாக பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி.சாந்தி இந்த ஆண்டில் நல்லாசிரியருக்கான விருதினை தமிழக முதல்வர் எடப்பாடி.பழனிசாமியிடமிருந்து பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதையடுத்து உச்சப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மாநில அளவிலான தூய்மைப் பள்ளியாக தேர்வு பெறச் செய்தது மற்றும் நல்லாசிரியர் விருது பெற்றது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.சாந்தியை மாவட்ட தொடக்க கல்விஅலுவலர் மாரிமுத்து,உச்சப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன்,கல்விக்குழு உறுப்பினர்கள் ராஜசேகர்,சூறையா மற்றும் கிராமபொதுமக்கள்,பள்ளி மாணவ,மாணவியர் வெகுவாக பாராட்டினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து