காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழகத்தில் “எதிர்கால ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு” என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்துப்பட்டறை

karikudi news

காரைக்குடி- காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழக கல்வியியல் கல்லூரியின் சார்பில் “எதிர்கால ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு” என்ற தலைப்பிலான ஒருநாள் தேசிய அளவிலான கருத்துப்பட்டறை கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் வி. பாலச்சந்திரன் இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரையாற்றுகையில், ஆசிரியர் என்பவர் மதிப்புமிக்கவர், ஆசிரியர்; தான் மருத்துவர், பொறியாளர், விஞ்ஞானி, இயக்குனர்கள், நீதிபதிகள் போன்ற பல்வேறு பதவிகளைவகிக்கக்கூடியவர்களை உருவாக்கு பவர். இந்த சமூகம் ஆசிரியரிடம் இருந்துதான் எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறது. நாம் வேலை தேடிச் செல்லும் போது பிழையில்லாமலும், திருத்தமான உச்சரிப்புடனும், நேர்முகத் தேர்வில் பேசிநம் திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே அவ்வேலையினை பெறமுடியும் என்றார்.
பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரிப் பேராசிரியர் ஆர்;. சகாயராஜ் வேலைவாய்ப்பின் முக்கியத்துவம் மற்றும் அந்தவேலைவாய்ப்பினை பெற நாம் எதிர்நோக்கும் போட்டித் தேர்வுகளின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார். நல்லமனநிலை, உரையாடல் திறன், குழுச்செயல்பாடு, சுயமேலாண்மை, ஆர்வம், சிந்திக்கும் திறன், நேர்மை ஆகிய திறன்களை தனது காணொலிகாட்சியின் மூலம் எதிர்கால ஆசிரியர்களுக்கு எடுத்துரைத்தார்.  தேசியக் கல்விக் கொள்கையின் புதியசெயல்பாடு, கலைத்திட்டம் ஆகியவை குறித்தும் விளக்கினார்.
அழகப்பாபல்கலைக்கழக தன்னார்வ படிப்பு மைய இயக்குனர் முனைவர் பி. சுரே~;குமார் தமது வாழ்த்துரையில், ஒவ்வொரு சாதனையாளருக்குப் பின்பு அவர்களுடைய ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அந்தவகையில் தான் ஹெலன் கெல்லர், இன்றைக்கு உலகம் முழுவதும் அவர் புகழ் பெற்றதற்கு அடித்தளமிட்டவர் அவரது ஆசிரியர் ஆனி செல்லிவன். ஒரு ஆசிரியர்தான் எதிர்கால சமுதாயத்தை உருவாக்க முடியும். நாம் எய்தப்படும் இலக்கு சரியாக இருத்தல் வேண்டும். ஒவ்வொருவரும் வேலையில் சேர்ந்தவுடன் நிர்வாகத்திறனும், பிரச்சினைகளை எதிர்நோக்கும் திறனும் கொண்டிருத்தல் அவசியம்.  வேலைக்குச் செல்லவேண்டு மென்றால், அதற்கான போட்டித் தேர்வுகளை எழுத முன்வரவேண்டும் என்ற உத்வேகத்தை மாணவர்கள் மனதில் ஆழமாகபதிய வைத்தார்.
கல்வியியல் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் இந்நிகழ்ச்சியில்  கலந்து கொண்டனர். கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் எ. பாலு அனைவரையும் வரவேற்றார். கலை மற்றும் கைவினை பயிற்சியாளர் இ.எம்.என். சர்மிளா நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து