எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஒருவர் தம் சுற்றத்தவரிடமும், மற்றவரிடமும் மாறாத நம்பிக்கை வைத்திருப்பதே மாறாமனமுடைய பண்பாகும். குடும்பம், சுற்றம், நண்பர்கள், வேலையில் அமர்த்துவோர், அலுவலர், அதிகாரிகள், உதவியாளர்கள், சமுதாயம், சமூகம், நானிலம், நாடு முதலிய குறுகிய சுவர்களையெல்லாம் மாறாமனமுடைமைப் பண்பு தகர்த்து விடுகிறது. அது பெருந்தகைமையானது. இறக்கும் வரையில் மாறாமன முடைமை இணக்க நிலையைக் கோருகிறது.
மனிதர்கள், மனித குழுக்கள் ஆகியோரிடம் மட்டும் அது இணக்கத்தைக் கொண்டது அல்ல் வாழ்க்கை மதிப்புகள், உன்னதமானவைகள், உயர்வுக்கான காரணிகள் அனைத்திற்கும் மாறாமனமுடைமை பற்றுறுதியைக் காட்டுகிறது. நமது எல்லா முயற்சிகளிலும் அது வெற்றிக்கனிகளை ஈட்டித்தருகிறது. எல்லாக் காரியங் களிலும் நிறைவைப் பெறுவதற்கு நற்பயன் தரும் முறையில் அது செயல்படுகிறது.
அறநெறிக்கு எதிரானவற்றின் வேர்களை மாறாமனமுடைமை தறித்துப்போடுகிறது. திறந்த மனமுடைமை, நேர்மை, உண்மையுடைமை ஆகியவற்றை நிலை பெறச்செய்கிறது. எல்லாக் காலங்களிலும் அது அர்ப்பண ஈடுபாட்டினை மதிக்கின்றது. இறைத்திருவுளப்படி நடக்கும் மெய்ப்பற்றினை மாறா மாறாமனமுடைமை வெளிப்படுத்துகிறது.
எடுத்துக்காட்டு
சி.எம்.ஸ்பாயீஜயன் என்பவர், தங்கள் தலைவனாகிய நெப்போலியன் மீது அவனுடைய வீரர்கள் எத்துணை பக்திப் பற்றுதல் வைத்துள்ளனர் என்று எடுத் துரைக்கின்றார். சாகும் அளவுக்குக் காயப்பட்டு வீழ்ச்சியடைந்துவிட்ட போர்வீரர் ஒருவர் தம் தானைத் தலைவருக்கு முடிந்த அளவு எழுந்து, கையை உயர்த்தி வீர வணக்கத்தை இறுதியாகச் செலுத்திவிட்டு இறப்பதென்பது வழக்கமான நிகழ்ச்சி. ஒருவேளை தம் தலைவர் நெப்போலியனை மிக அருகிலே காணுகிற வாய்ப்பு கிட்டுமென்றால், “பேரரசர் பல்லாண்டு வாழ்க!” எனக் கடைசி மூச்சுவிடுவதற்கு முன் முழக்கமிடுவான்.
நெஞ்சாழத்தின் அன்பை வெளிப்படுத்துகின்ற சொல்வன்மை மிக்க சொற்களே அவர்களது உதட்டிலிருந்து உதிரும். நெஞ்சில் துப்பாக்கிக் குண்டு அடிபட்டுக் கிடந்த வீரன் ஒருவரின் நெஞ்சில் இருந்து துப்பாக்கி ரவைகளை அறுவை மருத்துவர் அகற்ற முயற்சி செய்தபொழுது குண்டடிபட்ட வீரர் மருத்துவரது காதருகே கிசுகிசுத்துக் கூறியதாவது:
“இன்னும் ஆழமாகக் கத்தியை நெஞ்சுக்குள் செலுத்தினால் நமது பேரரசர் இருக்கும் இடத்திற்கு மிக நெருக்கமாகக் கொண்டு சென்றுவிடுவீர்கள்.” பேரரசை இதயத்தில் தாங்கி இருந்தான் அந்த வீரன்.
மாறாமனமுடைமை மதிப்பைப் பண்படுத்தி உருவாக்கிக் கொள்ள வழிமுறைகள்
மனச்சான்றின் குரலுக்குச் செவிமடுத்துப் பற்றுறுதியைக் காட்டுதல். ஒருவர் தமது நம்பிக்கைகளிலும், கொள்கைகளிலும் ஒரே நிலைபேற்றினைக் கொண்டிருத்தல்.
இரகசியங்களை வெளியிடாமல் பாதுகாத்தல்.
பழித்துப் பேசுவதையும் வதந்திகளைப் பரப்புவதையும் விட்டு விலகி நிற்றல்.
பிறர் புகழ்பெறத் தாம் உழைத்தல்.
தனது நாட்டைக் குறித்துப் பெருமையுடன் பேசுதல்.
நாட்டின் வளத்திற்காகவும் நலத்திற்காகவும் பணி செய்தல்.
இறைவன் மீது அன்பு பாராட்டுதலும், அவருக்காக பணி செய்தலும்.
உலக படைப்பின் அற்புதங்களையும் அழகுகளையும் பற்றி அறிந்து பாராட்டுதல்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026


