ஆறாவதுபடை வீடு சோலைமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி பெருந்திருவிழா 20ம் தேதி தொடங்குகிறது

புதன்கிழமை, 4 அக்டோபர் 2017      மதுரை
mdu news

அலங்காநல்லூர்,-  மதுரை மாவட்டம் அழகர்மலை உச்சியில் உள்ளது ஆறாவதுபடை வீடு என்னும் சோலைமலை முருகன் கோவில் ஆகும். பிரசித்திபெற்ற இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் கந்தசஷ்டி பெருந்திருவிழாவும் ஓன்றாகும். இந்த விழாவானது வருகின்ற 20ம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 9.15 மணிக்கு விக்கேனஸ்வர பூஜைகளுடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10மணிக்கு மஹா அபிஷேகத்துடன் அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். மேலும் சண்முகார்ச்சனை
சந்தன அலங்காரத்தில் தேவசேனாதிபதி நக்கீரர் திருமுருககாற்றுபடை அருள்செய்த வரலாறு இடம்பெறும். 21ம் தேதி சனிக்கிழமை வழக்கம்போல் பூஜைகளுடன் காமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடும்,மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் காட்சி தருவதும். தொடர்ந்து தங்க தேரோட்டமும் நடைபெறும்.
22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் பூஜைகளும். யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடும்,சந்தனஅலங்காரத்தில் திருஆவினன்குடி வரலாறு இடம்பெறும். 23ம் தேதி திங்கட்கிழமை ஆட்டுகிடா வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து தந்தைக்கு பிரணவ மந்திரம் உபதேசித்தல் இடம்பெறும். 24ம் தேதி செவ்வாய்கிழமையன்று சப்பர வாகனத்தில் சுவாமி புறப்பாடும்,வள்ளியை கஜமுகனிடம் சேர்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறும்.
 திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 25ம் தேதி அன்று சூரசம்ஹாரம் விழா நடைபெறுகிறது. இதில் காலையில் 8.30 மணிக்கு யாகசாலை பூஜைகளும், 9 மணிக்கு மஹா அபிஷேகமும்,10.30 மணிக்கு குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும், மாலை 3.30 மணிக்கு வேல் வாங்குதலும் பின்னர் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி திருக்கோவியிலின் ஈசான திக்கில் கஜமுகாசூரனையும்,அக்னி திக்கில் சிங்கமுகா சூரனையும் சம்ஹாரம் செய்து தல விருட்சம் நாவல் மரத்தடியில் பத்மாசூரனையும் சூரசம்ஹாரம் செய்யும் காட்சி நடைபெறும். தொடர்ந்து ஒளவைக்கு நாவற்கனி கொடுத்தல் காட்சி இடம்பெறும். 26ம் தேதி வியாழக்கிழமை காலை 10.15  மணிக்கு மேல் 10.45 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். 11.30 மணிக்கு திருபாவாடை தரிசனம் பல்லக்கு வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். மாலை 4.30மணிக்கு ஊஞ்சல் சேவை,மஞ்சள் நீர் உற்சவத்துடன் திருவிழா நிறைவுபெறுகிறது. சந்தன அலங்காரத்தில் ஆறுபடை வீடுகளில் முருகன் காட்சி தருவார். விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம்,நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
   

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து