நாமக்கல் மாவட்டத்தில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்: ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 6 அக்டோபர் 2017      நாமக்கல்
2

 

மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகேந்திரா கல்வி நிறுவனங்கள் ஆகியவை இணைந்து நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் மகேந்திரா பொறியில் கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது

வேலை வாய்ப்பு முகாம்

 

இம்முகாமிற்கு நாமக்கல் கலெக்டர் மு.ஆசியாமரியம், தலைமையேற்று மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்ற இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கி விழா பேருரை ஆற்றினார். அப்போது தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மட்டுமின்றி போட்டித்தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் உள்ளிட்ட அனைத்து வகையிலும் இளைஞர்களை மேம்படுத்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே எதிர்கால இந்தியாவின் தூண்களாகிய இளைஞர்கள் தாங்களாகவே முன்வந்து அரசால் வழங்கப்படும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என வாழ்த்தினார்.

இம்மாபெரும் நிகழ்ச்சியில் பெங்களுர், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், ஓசூர், சென்னை, போன்ற பகுதிகளிலிருந்து 100 க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களும், இம்முகாமில் 2500 மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கலந்து கொண்டனர். இவர்களில் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான பணி நியமண ஆணைகளை கலெக்டர் மு.ஆசியாமரியம், வழங்கினார்.

இம்முகாமில் கலந்துகொண்ட அனைத்து இளைஞர்களும், இந்த வளாகத்திற்குள் வந்து சென்றதும் வேலைவாய்ப்பிற்குண்டான பல்வேறு விவரங்களும், நேர்காணல் குறித்த அரிய செய்திகளும், தற்போதைய வேலைவாய்ப்பு விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வல்லதாக இந்நிகழ்ச்சி அமைந்தது.

இந்நிகழ்ச்சியில் கோவை மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) வே.மீனாட்சி திட்ட விளக்கவுரையாற்றினார். மகேந்திரா கல்வி நிறுவனங்களின் செயல் இயக்குநர் டாக்டர்.ஆர்.சாம்சன் ரவீந்திரன்; வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் டாக்டர்.ஆர்.மணி, திருச்செங்கோடு வருவாய்க்கோட்டாட்சியர் பாஸ்கரன், மகேந்திரா கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் பி.மகா அஜய் பிரசாத், திருச்செங்கோடு வருவாய் வட்டாட்சியர் பூவராகவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் செ.ரமேஷ்குமார் நன்றியுரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பலவேறு அரசுத்துறை அலுவலர்கள,; படித்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து