காவல்துறை முரட்டுத்தனமாக அல்லாமல் நாகரிகமடைந்ததாக இருக்க வேண்டும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுரை

சனிக்கிழமை, 7 அக்டோபர் 2017      இந்தியா
Rajnathsingh

புதுடெல்லி: 21-ம் நூற்றாண்டின் காவல்துறை முரட்டுத்தனமாக இருக்கக் கூடாது. முழுக்க நாகரிகமடைந்ததாக இருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் தெரிவித்துள்ளார்.

மீரட்டில் விரைவு செயல் படையின் (ஆர்ஏஎப்) 25-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்ட ராஜ்நாத் இவ்வாறு கூறினார். இதுகுறித்துக் காவல் துறைக்கு மேலும் சில அறிவுரைகளை வழங்கிய அவர், ''எதிர்ப்புகள், போராட்டங்கள் உள்ளிட்ட சவாலான சூழ்நிலைகளைக் கையாளும்போது காவல்துறை அதிகாரிகள் பொறுமையாக இருக்க வேண்டும்.

21-ம் நூற்றாண்டின் காவல்துறை முரட்டுத்தனமாக இருக்கக் கூடாது. முழுக்க முழுக்க நாகரிகமடைந்ததாக இருக்க வேண்டும். எனினும் சில நேரங்களில் காவல்துறை தனது பலத்தைச் சிறிய அளவில் பயன்படுத்த வேண்டியுள்ளது. அத்தகைய நேரங்களில் கூட மதிநுட்பம் அவசியம். சிறிய அளவிலான பலத்தைக் கொண்டு, பெரிய அளவிலான முடிவுகளைப் பெற வேண்டும்''
  மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்

அதேபோல மத்திய மற்றும் மாநிலக் காவல் துறைகள் புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவசர காலங்களில் போராட்டத்தில் ஈடுபடுவோரின் மனதை மாற்றும் வகையில் உளவியல் தீர்வுகளைக் கையாள வேண்டும்.


சாதி, மதம் அல்லது பிராந்திய வாதங்களின் மூலம் நாட்டின் ஒற்றுமையைக் குலைக்க முயலும் நிகழ்வுகளைப் பாதுகாப்புப் படையினர் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

21-ம் நூற்றாண்டின் காவல்துறை முரட்டுத்தனமாக இருக்கக் கூடாது. முழுக்க முழுக்க நாகரிகமடைந்ததாக இருக்க வேண்டும். எனினும் சில நேரங்களில் காவல்துறை தனது பலத்தைச் சிறிய அளவில் பயன்படுத்த வேண்டியுள்ளது. அத்தகைய நேரங்களில் கூட மதிநுட்பம் அவசியம். சிறிய அளவிலான பலத்தைக் கொண்டு, பெரிய அளவிலான முடிவுகளைப் பெற வேண்டும்'' என்றார் ராஜ்நாத்சிங்.

இந்தியா முழுவதும் ஹைதராபாத், அகமதாபாத், அலகாபாத், மும்பை, டெல்லி, அலிகர், கோயம்புத்தூர், ஜாம்ஷெட்பூர், போபால் மற்றும் மீரட் ஆகிய 10 இடங்களில் ஆர்.ஏ.எப் தளங்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து