முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிங்கு சிங்கிற்கு கங்குலி ஆறுதல்

சனிக்கிழமை, 4 மே 2024      விளையாட்டு
4-Ram-58-7

Source: provided

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற முடியாததை நினைத்து ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலகக் கோப்பைத் தொடர் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறுகிறது. மேற்கிந்தியத் தீவுகளின் ஆடுகளங்கள் மிகவும் மெதுவான ஆடுகளங்களாக இருக்கலாம். அதனால், அணித் தேர்வுக்குழு கூடுதலாக ஒரு சுழற்பந்துவீச்சாளரை அணியில் எடுத்துள்ளது. அதனால் கூட ரிங்கு சிங்குக்கு அணியில் இடம் கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால்,இது ரிங்கு சிங்கின் கிரிக்கெட் பயணத்தின் தொடக்கம் மட்டுமே. அதனால் அவர் அணியில் சேர்க்கப்படாது குறித்து மனம் தளரக் கூடாது.

50 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஆதிக்கம் செலுத்தின. டி20 உலகக் கோப்பையிலும் இந்த இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தும் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி சிறப்பாக உள்ளது. அணியில் உள்ள அனைவரும் போட்டியை வென்றுக் கொடுப்பவர்கள் என்றார்.

வீராங்கனையை சிறப்பித்த கூகுள்

ஹமிதா பானு இந்தியாவின் முதல் தொழில்முறை மல்யுத்த வீராங்கனை ஆவார். 1954-ம் ஆண்டு இதே நாளில், பிரபல மல்யுத்த வீரர் பாபா பஹல்வானை குத்துச்சண்டைப் போட்டியில் வெறும் 1 நிமிடம் 34 நொடிகளில் ஹமிதா பானு தோற்கடித்தார். அதன் பின்னர் அவருக்கு சர்வதேச அங்கீகாரமும் பெரும் புகழும் கிடைத்தது. அதனைச் சிறப்பிக்கும் விதமாக கூகுள் நிறுவனம், கவன ஈர்ப்புச் சித்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஹமிதா பானு, மல்யுத்த வீரர்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கினார். அச்சமின்றி எடையும் எதிர்கொள்ளும் அவரின் பண்பு இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுக்க நினைவு கூறப்படுகிறது. கூகுள் கவன ஈர்ப்புச் சித்திரத்தை வடிவமைத்த பெங்களூரைச் சேர்ந்த திவ்யா நேகி கூறுகையில், “டூடுல் வடிவமைக்க ஹமிதா பானு குறித்து ஆராய்கையில் பழமைவாதத்திற்கு எதிராக போராடிய அவரது வாழ்க்கை மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது. குழு சிந்தனைக்கு எதிராகச் செயல்படுவது மிகக் கடினமானது. மேலும், பெண்ணாக இருந்து அதனைச் செய்வது இன்னும் சிக்கலாக்கும். ஆனாலும், அவற்றை மீறி ஹமிதா வெற்றிகளைக் குவித்துள்ளார்” என்றார்.

ரஷ்ய செஸ் வீரர் விமர்சனம்

காங்கிரஸ் எம்.பி., ராகுல், அரசியல் பிரசாரத்திற்கு இடையே செஸ் விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது. மேலும், தனக்கு பிடித்த செஸ் வீரர் ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் எனக்கூறியிருந்தார். இது தொடர்பாக ஒருவர், எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,  நல்லவேளை, கேரி காஸ்பரோவ் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் விரைவில் ஓய்வு பெற்று விட்டனர். இல்லையென்றால், அவர்கள் இக்காலத்தில் மிகப்பெரிய செஸ் மேதையை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும்'' என பதிவிட்டு இருந்தார். அதனுடன் கேரி காஸ்பரோவ்வையும் மேற்கோள் காட்டி இருந்தார்.

இதனால், இந்த பதிவு காஸ்பரோவின் கவனத்திற்கு சென்றது. அவர் அதற்கு அளித்த பதிலில், தலைமைக்கு சவால் விடுவதற்கு முன்பு ராகுல் ரேபரேலியில் வெற்றி பெற வேண்டும் '' எனக்கூறியிருந்தார். இதனையடுத்து இந்த பதிவு வைரல் ஆகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து கேரி காஸ்பரோவ் அளித்த விளக்கத்தில் கூறியுள்ளதாவது: எனது சிறிய ஜோக் இந்திய அரசியலில் தாக்கம் அல்லது நிபுணத்துவம் பெறாது என நான் நம்புகிறேன். எனக்கு பிடித்த விளையாட்டில் ஒர் அரசியல்வாதி ஈடுபடுவதை என்னால் பார்க்காமல் இருக்க முடியாது '' எனக்கூறியுள்ளார். இது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

டோனி குறித்து பதிரானா உருக்கம்

சென்னை அணியில் இடம்பெற்றுள்ள இலங்கையை சேர்ந்த இளம் வீரர் மதிஷா பதிரானா வேகப்பந்து வீச்சு துறையில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.அவர் கடைசிக்கட்ட ஓவர்களில் பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்து வருகிறார். குறிப்பாக கடந்த வருடம் 12 போட்டிகளில் 19 விக்கெட்டுகள் எடுத்த அவர் சென்னை 5வது கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். இந்நிலையில் சி.எஸ்.கே அணியில் டோனி தம்மை மற்றொரு அப்பாவைப் போல பார்த்துக் கொள்வதாக பதிரானா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். மேலும் டோனி கொடுக்கும் சிறிய ஆலோசனைகள் கூட பெரிய அளவில் அசத்துவதற்கு உதவுவதாக உள்ளது என தெரிவிக்கும் அவர் இது பற்றி சி.எஸ்.கே நிர்வாகம் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியது பின்வருமாறு,

என்னுடைய அப்பாவுக்கு பின் கிரிக்கெட் வாழ்க்கையில் டோனி பெரும்பாலும் என் அப்பாவின் வேலையை செய்கிறார். எப்போதும் என் மீது அறையை காட்டும் அவர் நான் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய சில ஆலோசனைகளை கொடுக்கிறார். எனது வீட்டில் இருக்கும் போது கிட்டத்தட்ட எனது அப்பா காட்டும் அக்கறையை அவர் இங்கே காட்டுகிறார். அதுவே போதும் என்று நினைக்கிறேன். களத்திலும் களத்திற்கு வெளியேயும் அவர் நிறைய விஷயங்களை என்னிடம் சொல்ல மாட்டார். சிறிய விஷயங்களை மட்டுமே சொல்வார். ஆனால் அது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். அது எனக்கு நிறைய தன்னம்பிக்கையையும் கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

டி20 உலகக்கோப்பைகான நடுவர்கள் 

9-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 28 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 55 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில் இதில் நடைபெற உள்ள முதல் சுற்று போட்டிகளுக்கான நடுவர்களின் பட்டியலை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. அதன்படி 20 நடுவர்கள் மற்றும் 6 மேட்ச் ரெப்ரிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

நடுவர்கள்: கிறிஸ் பிரவுன், குமார் தர்மசேனா, கிறிஸ் கபனே, மைக்கேல் கோப், அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், அல்லாஹுடியன் பலேக்கர், ரிச்சர்ட் கெட்டில்பரோ, ஜெயராமன் மதனகோபால், நிதின் மேனன், சாம் நோகஜ்ஸ்கி, அஹ்சன் ராசா, ரஷித் ரியாஸ், பால் ரீபெல், லாங்டன் ரூசெர், ஷாகித் சைகாட், ரோட்னி டக்கர், அலெக்ஸ் வார்ப், ஜோயல் வில்சன் மற்றும் ஆசிப் யாகூப். மேட்ச் ரெப்ரிகள்: டேவிட் பூன், ஜெப் குரோவ், ரஞ்சன் மதுகல்லே, ஆண்ட்ரூ பைக்ராப்ட், ரிச்சி ரிச்சர்ட்சன் மற்றும் ஜவகல் ஸ்ரீநாத்.

டி-20 வெஸ்ட் இண்டீஸ் அணி 

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்தப் போட்டி தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை அறிவித்து வருகின்றன. ஏற்கெனவே நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், ஓமன் போன்ற நாடுகள் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன. இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அந்த அணிக்கு ரோவ்மன் பவல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம் பின்வருமாறு:- ரோவ்மேன் பவல் (கேப்டன்), அல்சாரி ஜோசப், ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், ஷிம்ரன் ஹெட்மேயர், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகீல் ஹொசைன், ஷமர் ஜோசப், பிரண்டன் கிங், குடாகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரசல், ஷெர்பேன் ரூதர்போர்ட், ரோமரியோ ஷெப்பர்ட்.

டி20 அமெரிக்க அணி அறிவிப்பு

நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், ஓமன் போன்ற நாடுகள் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன. இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்க உள்ள அமெரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அந்த அணிக்கு மோனாங்க் படேல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த அணியில் நியூசிலாந்து முன்னாள் வீரரான கோரி ஆண்டர்சன் இடம்பெற்றுள்ளார். 

அமெரிக்க அணி விவரம் பின்வருமாறு:- மோனாங்க் படேல் (கேப்டன்), ஆரோன் ஜோன்ஸ் (துணை கேப்டன்), ஆண்ட்ரீஸ் கவுஸ், கோரி ஆண்டர்சன், அலி கான், ஹர்மீத் சிங், ஜெஸ்ஸி சிங், மிலிந்த் குமார், நிசார்க் படேல், நிதிஷ் குமார், நோஷ்துஷ் கென்ஜிகே, சவுரப் நேத்ரால்வாகர், ஷாட்லி வான் ஷால்க்வி , ஸ்டீவன் டெய்லர், ஷயான் ஜஹாங்கீர். ரிசர்வ் வீரர்கள்: கஜானந்த் சிங், ஜுவானோய் டிரைஸ்டேல், யாசிர் முகமது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து