முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிக மோசமான வானிலை எதிரொலி : நிர்மலா சீதாராமனின் டோக்லாம் பயணம் ரத்து

ஞாயிற்றுக்கிழமை, 8 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

கேங்டாக் : சிக்கிம் மாநிலத்தில் மிகவும் மோசமான வானிலை நிலவி வருவதால் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் டோக்லாம் பயணம் ரத்தானது.

டோக்லாமில் சீனா அத்துமீறி வருவதை அடுத்து அந்தப் பகுதியை பார்வையிட திட்டம் இட்டிருந்தார் புதிய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த நிலையில் அங்கு நிலவி வந்த மோசமான வானிலை காரணமாக அவரது டோக்லாம் பயணம் ரத்தாகியுள்ள்ளது. இந்தியாவின் புதிய பாதுகாப்பு துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவி ஏற்றதில் இருந்து மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் இந்திய - சீன எல்லைப்பகுதியான சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாது லாவ் என்ற பகுதிக்கு சென்றுள்ளார் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். அங்கு அவர் ராணுவ உயரதிகாரிகளுடன் முக்கியமான சில ஆலோசனைகளை நடத்தினார்.

இந்தியாவின் முக்கியான எல்லைப்பகுதிகளில் சீனா சில நாட்களாக அத்துமீறி வருகின்றது. எனவே சீனா அத்துமீறும் எல்லையோர பகுதிகளுக்கு சென்று அந்நிய நாட்டின் ஊடுருவலை எப்படி முறியடிப்பது என்பது குறித்து ராணுவ உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மிகவும் முக்கியமான இந்த ஆலோசனையில் நிறைய விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சிக்கிம் பயணத்தில் அவர் டோக்லாம் பகுதிக்கு செல்வதாக திட்டமிடப்பட்டு இருந்தது. அங்கு சென்று அவர் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாட இருந்தார். ஆனால் அங்கு நிலவிய மிக மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரை இயக்க முடியாது என்பதால் அந்த பயண திட்டம் ரத்து செய்யப்பட்டது. இதேபோல் நிர்மலா சீதாராமன் சில நாட்களுக்கு முன்னர் காஷ்மீர் மாநிலம் சென்றிருந்தார். அங்கு அவர் ராணுவ உயரதிகாரிகள், அம்மாநில முதல்வர் மற்றும் கவர்னர் ஆகியோருடன் பாதுகாப்பு குறித்த பல முக்கியமான ஆலோசனைளை நடத்தினார். அதுமட்டும் இல்லாமல் எல்லை ஊடுருவல் குறித்து தெரிந்து கொள்வதற்காக சியாச்சின் மலையில் உள்ள ராணுவ முகாமுக்குச் சென்று அங்குள்ள ராணுவ வீரர்களிடம் பேசினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து