திருவொற்றியூர் உயர்நிலைப்பள்ளியில் மாணவர்கள் நுகர்வோர் மன்றம் திறப்பு

செவ்வாய்க்கிழமை, 24 அக்டோபர் 2017      சென்னை
Tvet news

தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் மாணவர்கள் நுகர்வோர் மன்றம் திருவொற்றியூர் சாத்துமாநகர் பகுதியில் உள்ள கன்னியகுருகுலம் அரசினர் மகளிர் உயர்நிலைப்பள்ளியில் தொடங்கப்பட்டது.

 நுகர்வோர் மன்றம்

தலைமை ஆசிரியர் பி.எஸ்.இந்துமதி தலைமையில் உணவு பொருள் வழங்கல் துறை துணைஆணையர் எல்.சிங்காரம் திருவொற்றியூர் பெண் காவல்நிலைய ஆய்வாளர் பி.சீலாமேரி அகியோர் முன்னிலையில் நுகர்வோர் மன்றம் தொடங்கப்பட்டது. மாநில துணைத்தலைவர் டி.விஜய் வரவேற்றார். விழாவில் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தலைவர் டாக்டர் சி.பால்பர்ணபாஸ் சிறப்புரையாற்றினார். மண்டலநிர்வாகிகள் எஸ்.சத்யா, கே.ஜோதி, எஸ்.மூர்த்தி, கே.ராஜன், வி.எஸ்.ரவி மற்றும் பி.டி..நிர்வாகிகள் எம்.சிவன், சாகுல்அமீத், வசந்தகுமார் மற்றும் நூற்றுக்கணக்கான மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் மண்டல செயலாளர் எஸ்.சிவக்குமார் நன்றி கூறினார்.

முன்னதாக திருவொற்றியூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவில் நடைபெற்ற தனித்திறன் போட்டியில் கன்னியகுருகுலம் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி ஆர்.தீபிகா கட்டுரை போட்டியில் இரண்டாவது இடத்தையும், பத்தாம் வகுப்பு படிக்கும் எம்.ப்ரித்தி கிராமிய நடனத்தில் மூன்றாவது இடத்தை பிடித்தனர். அவர்களுக்கு இந்த விழாவில் சிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து