முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரியில் ரூ. 2 கோடியே 66 லட்சம் மதிப்பில் 1973 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்: அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 29 அக்டோபர் 2017      தர்மபுரி

 

தருமபுரி மாவட்டம் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 1973 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.2 கோடியே 66 இலட்சம் மதிப்பில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நடைப்பெற்றது. இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ; பங்கேற்று ரூ. 2 கோடியே 66 இலட்சம் மதிப்பிலான 1973 விலையில்லா மடிக்கணினிகளை மாணவிகளுக்கு வழங்கினார்கள்.

மடிக்கணினி

ரூ. 2 கோடியே 66 லட்சம் மதிப்பிலான 1973 விலையில்லா மடிக்கணினிகளை மாணவிகளுக்கு வழங்கிய பின்னர் இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பேசியதாவது :-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 1973 மாணவ, மாணவியாகளுக்கு ரூ.2 கோடியே 66 இலட்சம் மதிப்பில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவில் பங்கேற்று விலையில்லா மடிக்கணினிகளை வழங்கியதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்திலேயே அனைவரும் உயர்கல்வி பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த 6 ஆண்டுகளில் 65 புதிய கல்லூரிகளை தொடங்கப்பட்டது. 961 புதிய பாடப்பிரிவுகளும் தொடங்கப்பட்டு 20 சதவீதம் அரசு கல்லூரியில் கூடுதலாக மாணவர்கள் சேருவதற்கு ஆணையிடப்பட்டு மாணவர் சேர்க்கை அனுமதிக்கப்பட்டது.

இந்திய அளவில் அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடும்போது உயர்கல்வியில் சேரும் மாணவர்களின்; எண்ணிக்கை 100-க்கு 24.5 சதவிகிதம் மாணவர்கள் தான் சேருகிறார்கள். தமிழ்நாட்டில் 100-க்கு 44.30 சதவிகிதம் பேர் உயர்கல்வி பயிலும் நிலையை பெற்றுள்ளார்கள்;. தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 12 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் 20 ஆயிரத்து 106 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அதில் 19 ஆயிரத்து 400 மாணவ, மாணவியர்கள் உயர்கல்வியில் சேர்ந்து படித்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே தருமபுரி மாவட்டத்தில் தான் 96.82 சதவிகிதம் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்து படித்து வருகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் 11 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது அதில் 8 கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் 3 உறுப்பு கல்லூரியும் அடங்கும். பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சொந்தமான பாலிடெக்னிக் கல்லூரியை அரசு பாலிடெக்னிக் கல்லூரியாக மாற்றி முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள். இதனால் 19 ஆயிரம் கட்டணமாக செலுத்தி வந்த மாணவர்கள் வரும் கல்வியாண்டு முதல் ரூ. 2 ஆயிரம் மட்டுமே கட்டணமாக பெறப்படும்.

மேலும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள கம்பைநல்லூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் 335 மாணவ, மாணவிகளுக்கு ரூ.45 இலட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினியும், மொரப்பூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் 132 மாணவ, மாணவிகளுக்கு ரூ.17 இலட்சத்து 81 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினியும், அரூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் 458 மாணவ, மாணவிகளுக்கு ரூ.61 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினியும், பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் 177 மாணவ, மாணவிகளுக்கு ரூ.23 இலட்சத்து 88 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினியும், பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள், பெண்கள் மற்றும் பொ.துறிஞ்சிப்பட்டி மேல்நிலை பள்ளிகளில் 356 மாணவ, மாணவிகளுக்கு ரூ.48 இலட்சத்து 4 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினியும், கடத்தூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் 284 மாணவ, மாணவிகளுக்கு ரூ.38 இலட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினியும் மற்றும் சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலை பள்ளியில் 231 மாணவ, மாணவிகளுக்கு ரூ.31 இலட்சத்து 17 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினியும் ஆக மொத்தம் 1973 மாணவ,மாணவியாகளுக்கு ரூ.2 கோடியே 66 இலட்சம் மதிப்பில் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.

நடப்பு கல்வி ஆண்டில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 96 மேல்நிலைப்பள்ளிகளில் படித்த 14 ஆயிரத்து 422 மாணவ, மாணவியர்களுக்கு ரூ. 13 ஆயிரத்து 495 மதிப்புடைய விலையில்லா மடிக்கணினி ரூ.19.46 கோடி மதிப்பில் வழங்கப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளில் 83 ஆயிரத்து 498 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.121.02 கோடி மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படுள்ளது. கிராமப்புறங்களிலுள்ள ஏழை எளிய குடும்பத்தை சார்ந்த மாணவ, மாணவியர்கள் உயர்க்கல்வி பயில வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா திட்டங்களை மாணவ, மாணவியர்கள் முழுமையாக பயன்படுத்தி எதிர்காலத்தினை சிறப்பாக அமைத்துகொள்ள வேண்டும் 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்கள் கடின உழைப்பும் விடா முயற்சி செய்து படித்து பொதுத் தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயின்று எதிர் காலத்தை சிறப்பாக அமைத்து கொண்டு வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, மாவட்ட அரசு வழக்கறிஞர் பசுபதி, வருவாய் கோட்டாட்சியர்கள் ராமமூர்த்தி, கவிதா, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் குப்புசாமி, முன்னாள் நகர மன்ற தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட கல்வி அலுவலர் (பொ) பொன்முடி, கூட்டுறவு சங்கத்தலைவர்கள் நல்லதம்பி, கோவிந்தசாமி, சிவபிரகாசம், பழனிசாமி, தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய பெருமக்கள், மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, மாவட்ட அரசு வழக்கறிஞர் பசுபதி, வருவாய் கோட்டாட்சியர்கள் ராமமூர்த்தி, கவிதா, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் குப்புசாமி, முன்னாள் நகர மன்ற தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட கல்வி அலுவலர் (பொ) பொன்முடி, கூட்டுறவு சங்கத்தலைவர்கள் நல்லதம்பி, கோவிந்தசாமி, சிவபிரகாசம், பழனிசாமி, தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய பெருமக்கள், மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து