முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அய்யம்பாளையம் மருதாநதி அணைக்கு 4 கோடி மதிப்பில் புதிய சாலை, பாலங்கள் அமைக்கும் பணி விவசாயிகள் மகிழ்ச்சி

புதன்கிழமை, 1 நவம்பர் 2017      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலக்குண்டு - வத்தலக்குண்டு அருகே அய்யம்பாளையம் மருதாநதி அணைக்கு 4 கோடி மதிப்பில் புதிய சாலை, பாலங்கள் அமைக்கும் பணி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகில் உள்ள அய்யம்பாளையத்திலிருந்து மருதாநதி அணை செல்லும் 7.4 கிலோ சாலையானது மிகவும் மோசமாக உள்ளதாக பொதுமக்களின் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி, தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வினய் ஆகியோர் வழியாக புதிய சாலை அமைக்கும் பணிக்காக  டெண்டர் விடப்பட்டது.  7.4 கிலோ மீட்டர் சாலை, 6 பாலங்கள் அமைப்பதற்கு தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறை சார்பாப 4 கோடிக்கு டெண்டர் விடப்பட்டு ஒப்பந்தகாரர்கள் நாகராஜன், விருமாண்டி ஆகியோர் பணியினை சிறப்பாக செய்து வருகிறார்கள். தற்போது ஒரு அடுக்கு சாலை அமைக்கப்பட்டும் இரண்டு பாலங்கள் நடைபெற்று வருகிறது. மீதம் உள்ள நான்கு பாலங்கள் பணிகள் துவங்கப்படும் நிலையில் உள்ளது. இப்பணியினை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சந்திரசேகரன். திண்டுக்கல் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சந்திரசேகரன் ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ராஜசேகரன், உதவி பொறியாளர் ஜோதிபாசு, சாலை ஆய்வாளர் மஞ்சுநாத் ஆகியோர் நடைபெறும் சாலை பணிகளை ஆய்வு செய்து வருகிறார்கள் இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும் போது மருதாநதி அணைக்கு ஒரே சாலை வசதிதான் உள்ளது. தற்போது 4 கோடி மதிப்பில் புதிய சாலை, பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருவதால் வாகனங்கள் தற்காலிகமாக செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்களும் விவசாயிகளும் பொருத்திருந்து இப்பணியினை சிறப்பாகவும் முழுமையாகவும் செய்து முடிப்பதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறும் ஒப்பந்தகாரர்கள் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நன்மை கருதி குறிப்பிட்ட காலத்தில் சிறப்பாகவும், உறுதியாகவும் பணிகளை செய்து முடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து