எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இன்றைய அவசர காலத்தில் நாம் செய்யும் கடுமையான பணிகள் மூலம் நமது உடல் நலத்தை நம்மால் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியவில்லை. எனவே நமது வீட்டில் மூலிகை செடிகளை வளர்த்து வருவதன் மூலம் நம் உடம்பின் ஆரோக்கியத்திற்கு பயன் தரக்கூடியதாக இந்த மூலிகைச் செடிகள் இருக்கும். நமது உடல் நலத்தைக் பாதுகாக்கும் மூலிகைகள் என்னெவென்று தெரிந்துக் கொண்டு அந்த செடிகளை நம் வீட்டில் வளர்த்து சிறந்த முறையில் பயன் பெறலாம்.
துளசி : சளியை போக்கி சிறந்த நிவாரணியாகப் பயன்படும் துளசி செடியை நமது வீட்டில் வளர்ப்பதன் மூலம் ஏராளமான நன்மைகளை நாம் பெறலாம். கிருமி நாசினியாக விளங்கும் இந்த துளசிச் செடியானது, ஆக்ஸிஜனை அதிக அளவு வெளிவிடுவதால், நாம் சுவாசிப்பதற்கு தூய்மையான காற்று கிடைக்கிறது. நமது வீட்டை சுற்றி இருக்கும் கிருமிகள் நம்மை தாக்காமல் தடுத்து சருமப் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. தினமும் இரவில் செம்புப் பாத்திரத்தில் துளசி இலைகளை ஊறவைத்து மறுநாள் காலையில் அந்த நீரையும் இலையையும் சாப்பிட்டு வந்தால், நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.
கற்றாழை : கற்றாழை செடியானது மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது. இந்த சோற்றுக் கற்றாழையின் வழவழப்பான சதைப் பகுதியை சாப்பிட்டு வருவதால், நமது உடலின் சூடு குறைந்து, சரும பிரச்சனைகள் மற்றும் பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. மேலும் அடிபட்ட இடங்களில் இந்த கற்றாழையை வைத்துக் கட்டினால் ரத்தம் அதிகமாக வெளியேறுவதை தடுக்கிறது.
கற்பூரவல்லி : கற்பூரவல்லி மூலிகையானது ஜலதோஷத்தை போக்கும் சிறந்த மூலிகை மருந்தாக பயன்படுகிறது. எனவே இந்த கற்பூரவல்லி மூலிகையின் சாற்றை தாய்பாலுடன் கலந்து ஜலதோஷம் உள்ள குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், உடனடியாக நல்ல தீர்வுகள் கிடைக்கும்.
நிலவேம்பு : மூலிகைச் செடியைச் சேர்ந்த நிலவேம்பானது, நமது வீட்டில் இருக்கும் கிருமிகளின் தொற்றுகள் நம்மை தாக்காமல் தடுக்கும். நிலவேம்பின் இலையை கஷாயம் வைத்து குடித்து வந்தால், நமது உடம்பின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஜலதொஷம், வயிற்றுப் புண் மற்றும் காய்ச்சல் வராமல் தடுத்து, சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
தூதுவளை : தூவளையின் இலையை பொடியாகச் செய்து சாப்பிடுவதை விட துவையல் செய்து சாப்பிட்டு வந்தால், ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கும். நெஞ்சு சளி, மூச்சிரைத்தல், இருமல் உள்ளவர்கள் இந்த தூதுவளையை துவையல் அரைத்து தினமும் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
பிரண்டை : காரத்தன்மை நிறைந்த பிரண்டைச் செடியானது, அதிக மருத்துவ குணம் நிறைந்தது. பிரண்டையின் நரம்பு பகுதியை நீக்கி, மோரில் சிறிது நேரம் ஊறவைத்து துவையல் அரைத்து தினமும் சாப்பிட்டு வந்தால், மூட்டுவலி, எலும்புத் தேய்மானம், இடுப்புவலி, வயிற்றுபுண் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடச் செய்கிறது. மேலும் இந்த பிரண்டை மூலிகையானது, அதிக பசியை தூண்டும் தன்மை உடையதால், சாப்பிடாத குழந்தைகளுக்கு கொடுத்து வரலாம்.
வெற்றிலை : வெற்றிலை கொடியானது, விஷக் கிருமிகள் நம் மீது தாக்காமல் தடுக்கும் தன்மைக் கொண்டது. வெற்றிலையின் சாற்றை எடுத்து குடிப்பதால், நமது உடம்பில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. மதிய வேளை உணவுக்கு பின் வெற்றிலையுடன், ஒரு பாக்கு, ஏலக்காய், கிராம்பு, சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து சாப்பிட்டால், தொண்டைவலி, ஜீரணக் கோளாறு, சளி போன்ற பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது.
செல்வராஜ்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும்: ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு வாதம்
12 Dec 2025மதுரை, ஆகம விதிகளுக்கு எதிராக கோவில் நிர்வாகம் செயல்பட முடியாது என்றும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 12-12-2025
12 Dec 2025 -
75-வது பிறந்தநாளை முன்னிட்டு ரஜினிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
12 Dec 2025சென்னை, ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் நண்பருக்கு வாழ்த்துகள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு ரூ. 11,718 கோடி மத்திய அமைச்சரவையில் ஒப்புதல்
12 Dec 2025புது டெல்லி, வரும் 2027 மார்ச் 1-ல் மேற்கொள்ளவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு ரூ.11,718 கோடியை ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை வழக்கு ஒத்திவைப்பு
12 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு வாதிட்ட நிலையில், திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம் தொ
-
ஜோர்டான், ஓமன் உள்பட 3 நாடுகளுக்கு டிச. 15-ல் பிரதமர் மோடி பயணம்
12 Dec 2025புதுடெல்லி, ஜோர்டான், ஓமன் மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடுத்தவாரம் அரசு முறைப் பயணம் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரஷ்யா - உக்ரைன் போர் 3-ம் உலக போருக்கு கொண்டு போய் விடும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
12 Dec 2025வாஷிங்டன், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் விவகாரத்தில், நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள அதிபர் ட்ரம்ப் போர் தொடர்ந்தால் இந்த விவகாரம் 3-ம் உலக போருக
-
ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 1 லட்சத்தை நெருங்கியது
12 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது.
-
தமிழகம் வருகிறார் அமித்ஷா
12 Dec 2025சென்னை, வரும் 15-ம் தேதி (நாளை மறுநாள்) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி விவகாரம், தேர்தல் பணிகள் குறித்து பா.ஜ.க.
-
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் செயல்பாட்டுக்கு வருவது எப்பொழுது..? இஸ்ரோ தலைவர் தகவல்
12 Dec 2025நெல்லை, 2027-ம் ஆண்டு தொடக்கத்தில் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் செயல்பட தொடங்கும் என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.
-
பல தலைமுறைகளை கவர்ந்தவர்: நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் தமிழில் வாழ்த்து
12 Dec 2025புதுடெல்லி, நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மு.க.ஸ்டாலினே மீண்டும் தமிழக முதல்வர் ஆவார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
12 Dec 2025சென்னை, 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று மு.க.ஸ்டாலினே மீண்டும் தமிழக முதல்வர் ஆவார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரம் லேசான மழை பெய்ய வாய்ப்பு
12 Dec 2025சென்னை, தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வணிக ரீதியிலான அமெரிக்க செயற்கைக்கோள் வரும் 15-ம் தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தகவல்
12 Dec 2025திருப்பதி, வரும் 15-ம் தேதி அமெரிக்க செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
-
ஆந்திரா: பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி: பிரதமர் இரங்கல் -நிதியுதவி அறிவிப்பு
12 Dec 2025ஐதராபாத், ஆந்திரத்தில் கோவிலுக்குச் சென்ற தனியார் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
-
சட்டசபை கூட்டத்தொடர் முடித்துவைப்பு
12 Dec 2025சென்னை, கடந்த அக்டோபர் மாதம் 14-ம் தேதி மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் இந்த ஆண்டுக்கான சட்டசபை கூட்டத்தொடரை முடித்துவைப்பதாக கவர்னர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளா
-
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: சென்னை ஐகோர்ட் விசாரணை நடைமுறையில் தவறு உள்ளது: த.வெ.க. தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
12 Dec 2025புது டெல்லி, கரூரில் நடைபெற்ற த.வெ.க.
-
ட்ரம்ப் வலது கையில் காயம்...? வெள்ளை மாளிகை விளக்கம்
12 Dec 2025வாஷிங்டன், ட்ரம்ப் வலது கையில் காயம் குறித்து வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் விளக்கமளித்துள்ளார்.
-
சவுதி அரேபியாவில் இனி முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மது விற்பனை
12 Dec 2025துபாய், முதல்முறையாக சவுதி அரேபியாவில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மது விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
6.7 ரிக்டர் அளவில் ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்
12 Dec 2025டோக்கியோ, ஜப்பானில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை விடுபட்ட மேலும் 17 லட்சம் பேருக்கு ரூ.ஆயிரம் உரிமைத்தொகை: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
12 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை விடுபட்ட மேலும் 17 லட்சம் பேருக்கு ரூ.ஆயிரம் உரிமைத்தொகை வழங்கும் விரிவாக்க திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி
-
ரஜினியின் வாழ்க்கையை மாற்றிய அந்த 10 நிமிடம்
12 Dec 2025சென்னை, நடிகர் ரஜினிகாந்த்தின் திரை வாழ்வைப் பலப்படுத்திய திரைப்படம் அபூர்வ ராகங்கள்.
-
தீவிரமடையும் காற்று மாசு விவகாரம்: விவாதம் நடத்த ராகுல் விடுத்த அழைப்பை ஏற்றது மத்திய அரசு
12 Dec 2025டெல்லி, காற்று மாசு விவகாரம் குறித்து விவாதம் நடத்த கோரிக்கை விடுத்த ராகுல் காந்தியின் அழைப்பை மத்திய அரசு ஏற்றுள்ளது.
-
மேகதாது அணை கட்ட 30 பேர் கொண்ட குழு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
12 Dec 2025சென்னை, மேகதாது அணை கட்ட 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்ட நிலையில் அதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளஆர்.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சென்னை ஐகோர்ட் பதிவாளரை சேர்க்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
12 Dec 2025புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக தனி நீதிபதி ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.


