குமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில்,டிஜிட்டல் இந்தியா குறித்த பயிற்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 7 நவம்பர் 2017      கன்னியாகுமரி
kanyakumari collector

 கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்   தலைமையில், பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக லூயி பிரெயிலி கூட்டரங்கில்  நடைபெற்றது.   திங்கட்கிழமை தோறும்; கலெக்டர்  தலைமையில் நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு குறைகள் தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. 

சான்றிதழ்கள்

அதனடிப்படையில், மத்திய அரசின் எலக்ட்ரானிக் சிஸ்டம் டிசைன் மற்றும் உற்பத்தி செய்தல்  திட்டத்தின்கீழ், டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் சார்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில், ஜெயராம் கல்வி அறக்கட்டளை சார்பில், பயிற்சி அளிக்கப்பட்டது.  இதில், கலந்து கொண்ட 55 மாணவ, மாணவியர்களுக்கு, பயிற்சி நிறைவு சான்றிதழ்கள் வழங்கும் அடையாளமாக, 20 மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ்களை, கலெக்டர் அலுவலக லூயி பிரெயிலி கூட்டரங்கில்  நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்   வழங்கினார். முன்னதாக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம், தகவல் தொடர்பு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு, நாகர்கோவில், கிராம குடிநீர் திட்ட கோட்டம் மற்றும் மண்டைகாடு, எ.எம்.கே. தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு முகாமில், கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்   பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை, கலெக்டர் அலுவலக வளாகத்தில் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர்  சோ. இளங்கோ, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செயற்பொறியாளர் பிரசாத், உதவி பொறியாளர் ஹரி, ஜெயராம் கல்வி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர்கள்  சுரேஷ்,  டேனியல், இ.ஸி. லேண்ட் நிறுவனர்  அற்புதமேரி, அமிலா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து