தேர்தலின் முக்கியத்துவம் குறித்த பள்ளி மாணவ, மாணவியர்களிடையே நடைபெற்ற விநாடி வினா போட்டி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் பார்வையிட்டார்

செவ்வாய்க்கிழமை, 7 நவம்பர் 2017      கன்னியாகுமரி
kanyakumari collector

இந்தியா தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி,   தேர்தலின் முக்கியத்துவம் குறித்து, பள்ளி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில்,  நடைபெற்ற விநாடி வினா போட்டியினை,கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான் பார்வையிட்டார்.

விநாடி வினா போட்டி

இந்தியா தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி, தேர்தலின் முக்கியத்துவம் குறித்து, பள்ளி மாணவ, மாணவியர்களிடையே (10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை) விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில், விநாடி வினா போட்டி  கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றது.  நாகர்கோவில் கல்வி மாவட்டம் மற்றும் தோவாளை வட்டத்திற்கு நாகர்கோவில், எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியிலும், தக்கலை கல்வி மாவட்டத்திற்கு, தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், குழித்துறை கல்வி மாவட்டத்திற்கு, மார்த்தாண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் வைத்து நடைபெற்றது.  இன்று நாகர்கோவில், எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விநாடி வினா போட்டியினை, கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்  , பார்வையிட்டு, பின்னர் கலெக்டர் , தலைமையுரையில் தெரிவித்ததாவது:-

இந்தியா தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி, பள்ளி மாணவ, மாணவியர்களிடையே, தேர்தல் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.  இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில், 10 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவியர்களுக்கு, மாவட்ட கல்வி அளவில் (நாகர்கோவில், தக்கலை, குழித்துறை) விநாடி வினா போட்டி (30 கேள்விகள், ஒரு மணி நேரம்) நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவ, மாணவியர்கள் (இரண்டு நபர்கள்) மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.  இதில், வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு தேசிய வாக்காளர் தினம் (ஜனவரி 25) அன்று பரிசுகள் வழங்கப்படவுள்ளது என கலெக்டர்  தெரிவித்தார். தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விநாடி வினா போட்டியினை, பத்மநாபபுரம் சார் ஆட்சியர்  ராஜகோபால் சுன்கரா   பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள். 

இந்நிகழ்ச்சியில், தேர்தல் தனி வட்டாட்சியர்  சுப்பிரமணியன், துணை வட்டாட்சியர்  ரவிச்சந்திரன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (நாகர்கோவில்)  ஆறுமுகம், நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்  விஜயன், வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி நாகம்மாள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து